வி.சுகிர்தகுமார்
தேசிய மக்கள் சக்தியின் ஆலையடிவேம்பு பிரதேச ஒருங்கிணைப்பு காரியாலயம் இன்று (13) திறந்து வைக்கப்பட்டது.
தேசிய மக்கள் சக்தியின் ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளர் ஆர்.ரதீசன் தலைமையில் இடம்பெற்ற அலுவலக திறப்பு விழாவில் அம்பாரை மாவட்ட தமிழ் மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான மஞ்சுள ரத்நாயக்க மற்றும் ஆதம்பாவா ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டதுடன் பொத்துவில் தொகுதி இணைப்பாளர் மற்றும் திருக்கோவில் பிரதேச பொறுப்பாளர் அன்ரன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
திறப்பு விழாவிற்காக வருகை தந்த அதிதிகள் வரவேற்கப்பட்டதுடன் பிரதம அதிதிகள் இணைந்து கட்சியின் ஆலையடிவேம்பு பிரதேச ஒருங்கிணைப்பு காரியாலயத்தை திறந்து வைத்தனர்.
இதன் பின்னராக இடம்பெற்ற கூட்டத்திலும் கலந்து கொண்டனர்.
இக்காரியாலயம் மூலம் மக்கள் தங்களது முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும் எனவும் மாதம் இரு முறை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இக்காரியாலயத்திற்கு வருகை தருவார் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதேநேரம் இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா இலங்கையில் இப்போது புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
தமிழர் சிங்களவர் முஸ்லிம்கள் என வேறுபாடின்றி நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். மொழி வாதம் பிரதேச வாதம் இனவாதம் போசாமல் பேசாமல் இலங்கையர் என வாழ்வதற்கு ஆயத்தம் செய்து கொண்டிருக்கின்றோம்.இதுவே நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள பெருமாற்றம் என்றார்.
மேலும் நாட்டில் எரிபொருளின் விலையை குறைத்துள்ளோம். 90 பில்லியானாக இருந்த கடனை குறைத்துள்ளோம். வீதிகளில் இருந்த வீதித்தடைகளை எடுத்துள்ளோம் என குறிப்பிட்டார்.

Post a Comment
Post a Comment