கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு பாதணிகள் வழங்கி வைப்பு




 


நூருல் ஹுதா உமர்


கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவிகளுக்கு பாதணிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு கல்லூரி முதல்வர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் (SLEAS) தலைமையில் அதிபர் காரியாலயத்தில் இடம்பெற்றது.

சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட  பாதணிகளை  கல்லூரியின் பழைய மாணவியும் கல்முனை வடக்கு தள வைத்தியசாலையின் கண் பிரிவின் மருத்துவ அதிகாரியுமான டாக்டர். நஸ்ரின் சஜிதா கமல் நிஷாத் மற்றும் நன்கொடையாளர்களின் நன்கொடை அமைப்பின் தலைவரும் பொறியியலாளருமான எம்.சி.கமால் நிஷாத் ஆகியோரின் அனுசரணையில்  கல்லூரிக்கு கிடைக்க பெற்றமை குறிப்பிடத்தக்கது.

தரம் 06 - 10 பிரிவு மாணவிகள் பயன்படுத்தும் நோக்கில் அப்பிரிவுகளின் பகுதித் தலைவர்கள் ஊடாக இலவச பாடசாலை பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டன.