மட்டு திருப்பெருந்துறையில் மைதானத்தை தனது காணி என உரிமை கோரி சென்ற தென்னிலங்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரை தடுத்து நிறுத்திய மக்கள் --
((கனகராசா சரவணன்)
மட்டக்களப்பு திருப்பெருந்துறை மறுமலர்ச்சி விளையாட்டுகளக மைதானதை தனது காணி என உறுதி உட்பட ஆவணங்களுடன் சென்று வேலி நாட்ட வந்த கொழும்பைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரை பொதுமக்கள் அங்கிருந்து விரட்டியடித்துள்ள சம்பவம் இன்று வியாழக்கிழமை (23) இடம் பெற்றுள்ளது
மட்டக்களப்பில் பொலிஸ் அத்தியட்சகராக (எஸ்.பி.பி) கடமையாற்றி 2023 ம் ஆண்டு ஓய்வு பெற்ற தென்னிலங்கை பகுதியைச் சேர்ந்தவர் குறித்த பிரதேசத்திலுள்ள மறுமலர்ச்சி விளையாட்டுகளக மைதானமாக பயன்படுத்திவரும் மைதானத்தில் ஒருபகுதியை சம்பவதினமான இன்று பகல் 11.00 மணியளவில் ஆட்களுடன் கட்டைகள் கொண்டு அடைக்க முற்பட்டார்.
இதனையடுத்து அங்கு ஒன்று கூடிய பொதுமக்கள் இது விளையாட்டு மைதான காணி இதனை அடைக்க விடமுடியர்து என தெரிவித்து அடைக்க விடாது தடுத்ததையடுத்து ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரிக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் எற்பட்டு பொரும் சர்ச்சை ஏற்பட்டதையடுத்து பொலிசார் வரவழைக்கப்பட்டனர்
இதன் போது ஒய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி தான் சட்டரீதியாக 2023 ம் ஆண்டு ஒருவரிடம் இருந்து 15 பேச் காணியை சட்ட ரீதியாக சட்டத்தரணி ஊடாக வாங்கியுள்ளதாகவும் என்னிடம் சட்ட ரீதியான ஆவணங்கள் காட்டி தனது காணியை அடைக்க விடாது தடுத்துள்ளதாக பொலிசாரிடம் தெரிவித்தார்.
இதனையடுத்து பொதுமக்கள் குறித்த காணி கடந்த 1895 ம் ஆண்டு தொடக்கம் விளையாட்டு மைதானமாக பயன்;படுத்தி வருவதாகவும் இது அரசகாணி எனவும் இவர்; ஒரு பொலிஸ் அதிகாரி அவரது அதிகாரத்தை பயன்படுத்தி சட்டவிரோதமாக காணியை அபகரிக்க வந்துள்ளர் இவரைப் போல கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் ஒருவர் ஒரு ஆவனங்களை கொண்டுவந்து இது தனது காணி என சொந்தம் கொண்டாடிய நிலையில் அவரை தடுத்ததையடுத்து அவர் போனவர் போனவர்தான்
அவ்வாறு இந்த மைதானத்தில் உள்ள காணியை அடைக்கவிடாது தடுத்தபோது பொலிஸ் அதிகாரி இந்த மைதான காணி 10 பேருக்கு இருப்பதாகவும் இதில் 15 பேச் காணியை தான் ஒருவரிடம் வாங்கியதாகவும் எனது 15 பேச் காணியை தரவும் நான் மைதானத்தை புனரமைத்து தருவாகவும் எங்களிடம் அவர் தெரிவித்தார்.
இவர் என்ன காரணத்துக்காக மைதானத்தை புனரமைத்து தரவேண்டும்? எனவே நாங்கள் குறித்த காணியை விற்பனை செய்தவர் யார் அவரை வரவழையுங்கள் நீங்கள் வைத்திருக்கும் ஆவணங்கள் யாவும் போலியாக தயாரிக்கப்பட்டது என தெரிவித்து வேலி அடைக்கவிடாது தடுத்தோம் என்றனர்
தொடர்ந்தும் மக்கள் குறித்த காணிக்கு சொந்தம் கொண்டாடிய பொலிஸ்; அதிகாரியை வேலியடைக்க விடாது தடுத்தனர். இதனையடுத்து குறித்த பொலிஸ் அதிகாரி தடுத்த மக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பின்னர் அவர்கiளை எச்சரித்துவிட்டு அங்கிருந்து ஆட்களுடன் வெளியேறிச் சென்றுள்ளார்.
இது தொடர்பாக மட்டு தலைமையக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment
Post a Comment