சட்டத்தரணி சசிராஜிக்கு,சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது




 

செய்தி புதுப்பிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை சட்டத்தரணி சசிராஜீக்கு நிறைவுற்றுள்ளது. இவர் நேற்றைய தினம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையிலிருந்து மட்டக்களப்பு  போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.இவரை இன்றைய தினம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


முந்திய செய்தி.

Rep/Mohammed Jahaan, SriHaran.

🔴திங்களன்று { 2025.01.06 } மாலை தம்பட்டையில்  விபத்தில் சிக்கி கடுங்காயமுற்ற  அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்க அங்கத்தவர் தம்பிலுவிலைச் சேர்ந்த திடீர் மரண விசாரணை அதிகாரியும் சட்டத்தரணியுமான  சசிராஜ் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பின்பு அவர் CT ஸ்கேன் பரிசோதனைகளுக்கான கல்முனை வடக்கு வைத்தியசாலைக்கு இன்றிரவ 10.15 இற்கு  மாற்றப்பட்டுள்ளார்.

 இவர் செலுத்தி சென்ற மோட்டார் சைக்கிள் தம்பட்டை பகுதியில் வைத்து கெண்டர் ஒன்றுடன் மோதியதில் விபத்தூக்குள்ளாகியது.