அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில்







 2025 ம் புதிய ஆண்டிற்கான அரசாங்க சேவை சத்திய பிரமாண நிகழ்வு.


மேற்படி நிகழ்வானது இன்று 2025.01.01 புதன்கிழமை அட்டாளைச்சேனை  பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.


அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் P. T . M Irfan சேர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்


🎶 பிரதேச செயலாளரினால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, 


🎶 தேசிய கீதத்திற்கு உத்தியோகத்தர்களினால் மரியாதை செலுத்தப்பட்டு,


🎶 பிரதேச செயலாளர் முன்னிலையில் அனைத்து உத்தியோகாத்தர்களும் சத்தியப்பிரமாணம் செய்து 


 🎶 நாட்டுக்காக அர்ப்பணித்த ராணுவ வீரர்களுக்கு 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு, 


 🎶 மத தலைவர்களால் காலை நற்சிந்தனை வழங்கப்பட்டு, 


🎶 இலங்கை ஜனநாயக குடியரசின் அதி மேதகு ஜனாதிபதி அவர்களின் நேரடி உரையினையும் செவிமடுத்து கிளீன் ஸ்ரீ லங்கா நிகழ்வினையும் நேரடியாக செவி மடுத்து 


🎶 பிரதேச செயலாளர் அவர்களினால் ஒவ்வொரு பிரிவிலும் உள்ள உத்தியோகத்தர்கள் இவ் வருடத்தில் சேவையாற்றிய பணிகளை நிறைவு கூறி அதற்கான நன்றிகளையும் தெரிவித்து 


வினைத்திறனாகவும், பயன்மிக்கதாகவும், திடசங்கற்பத்துடனும், உயரிய அர்ப்பணிப்புடனும் நேர்மையாகவும், பக்கசார்பின்றியும்  பொதுமக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற தொனிப்பொருளில் தனது தலைமை உரையினை சுருக்கமாக கூறியமை இங்கு சிறப்புக்குரியதும், இன்றிமையாதமையுமாகும்.


🎶 அத்துடன் பிரதேச செயலாளரின் சொந்த பணத்தில் அனைத்து உத்தியோகாத்தர்களுக்கும் சேமிப்பு உண்டியல் வழங்கப்பட்டு 


இந் நிகழ்வுக்கு தீகவாபி சைத்திய பரிவார விகாராதிபதியும் கலந்து கொண்டு சிறப்பித்தார். 


🎶 அத்துடன் விகாராதிபதியினால் வழங்கப்பட்ட கிரிபத் சிற்றுண்டி பரிமாறிய பின் இந் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.