கல்முனையில் ஓய்வூதிய பிரிவு திறந்து வைப்பு
-------------------------------------------------
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் பணியாற்றி அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றுச்செல்லும் வைத்தியர்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தினை விரைவாக பெற்றுக்கொடுக்கும் நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் ஓய்வூதிய பிரிவொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் Clean Srilanka வேலைத்திட்டத்திற்கமைவாக, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் வழிகாட்டலில் குறித்த பிரிவு செவ்வாய்க்கிழமை (28) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர், திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.ஏ.எஸ்.எம்.எஸ்.ஷாபி, தாய் சேய் நலன் பிரிவு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.றிஸ்பின், தொற்றா நோய் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எச்.ஐ.எம்.எஸ்.இர்ஷாத், பொது சுகாதார பொறுப்பு வைத்திய அதிகாரி ஏ.எல்.எம்.அஜ்வத், உயிரியல் மருத்துவ பொறியியலாளர் என்.எம்.இப்ஹாம், கணக்காளர் உசைனா பாரிஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றுச்செல்லும் அரச உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் தங்களது ஓய்வூதியத்தினை பெற்றுக்கொள்வதில் பல்வேறு இன்னல்களையும் அசௌகரியங்களையும் எதிர்கொண்டு வரும் இக்காலத்தில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் ஓய்வூதிய பிரிவு திறந்து வைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க விடயமாகும்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் உள்ள சுகாதார நிறுவனங்களில் பணியாற்றும் வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் இதன் ஊடாக நன்மையடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment