சாய்ந்தமருது லீடர் அஷ்ரப் வித்தியாலயம் இம்முறை வரலாற்று சாதனை !




 


சாய்ந்தமருது லீடர் அஷ்ரப் வித்தியாலயம் இம்முறை நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் வரலாற்று சாதனை !

நூருல் ஹுதா உமர்
கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/ லீடர் எம்.எச்.எம்.அஷ்ரப் வித்தியாலயம் இம்முறை 2024 ம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் வரலாற்று சாதனையை படைத்துள்ளது.
இந்த பாடசாலையில் இருந்து பரீட்சைக்கு தோற்றிய மொத்தம் 57 மாணவர்களில் பத்து மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர். 85.8 என்ற சராசரி அடிப்படையில் பெற்றுக்கொண்டுள்ள இந்த பாடசாலையின் அடைவுக்கு அதிபர், ஆசிரியர்களின் அயராத உழைப்பே காரணம் என பெற்றோர்கள் நன்றி பாராட்டுகிறார்கள்.
சுனாமிக்கு பின்னர் கரையோர பிரதேச மாணவர்களின் கல்வி நன்மையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த பாடசாலை போதியளவு அடிப்படை வசதிகளே இல்லாத நிலையில் இயங்கி வருவதுடன் பின்தங்கிய மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு உத்வேகம் அளித்து வருகிறது.

கல்விசார் மற்றும் கல்விசாரா போட்டிகளில் கூட மிளிரும் இந்த பாடசாலையின் மேம்பாட்டில் முதன்மை வகிக்கும் பாடசாலை அதிபர் எம்.ஐ.எம்.சம்சுதீன், பிரதியதிபர், உதவியதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவினர், சாதனை மாணவர்கள் எல்லோருக்கும் பொதுமக்கள் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.