பொங்கல் பானைகளும் பொங்கல் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன




 


வி.சுகிர்தகுமார்        


 அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் வாழும் தெரிவு செய்யப்பட்ட வருமானம் குறைந்த மக்களுக்கான பொங்கல் பானைகளும் பொங்கல் பொருட்களும் இன்று வழங்கி வைக்கப்பட்டதுடன் சக்தி பொங்கல் வழிபாடுகளும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்றன.
மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடம் கல்வி சமூக நலன் அறப்பணி மையத்தின் அனுசரணையோடு அக்கரைப்பற்று பகுதி பொறுப்பாளர் நவீன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் கலந்து கொண்டார்.
பூஜை வழிபாடுகளோடு ஆரம்பமான நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன.
தொடர்ந்து பங்காரு அடிகளாரின் அற்புதங்கள் பற்றியும் அவரது வழியில் பக்தர்கள் ஆற்றிவரும் சேவைகள் தொடர்பிலும் உரைகள் இடம்பெற்றன.
இதன் பின்னராக பிரதேச செயலாளர் உள்ளிட்ட பிரதேச செயலக அதிகாரிகள் இணைந்து வருமானம் குறைந்த மக்களுக்கான பொங்கல் பானைகளும் பொங்கல் பொருட்களையும் வழங்கி வைத்தனர்.