வி.சுகிர்தகுமார்
அம்பாரை மாவட்டத்திலும் பலத்த மழை சில தினங்களாக பெய்து வருகின்றது.
இன்று காலை முதல் பலத்த இடி மின்னலுடன் கூடிய மழை வீழ்ச்சி அதிகரித்துள்ளது.
இதனால் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் பல வீதிகளும் தாழ் நிலப்பிரதேசங்களும் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது..
இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தைப்பொங்கலை கொண்டாடுவதற்கு தயாரான தமிழ் மக்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அன்றாட தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் சந்தையில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத நிலைக்கும்; மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
மழை வீழ்ச்சி தொடர்ந்தால் வெள்ளப்பெருக்கு எற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது.
இதேநேரம் கால்நடைகளின் நடமாட்டம் வீதிகளில் காணப்படுவதால் பாதசாரிகளும் வாகன ஓட்டுனர்களும் ஆபத்தை எதிர்கொள்ளும்; நிலையினை எதிர்கொண்டுள்ளனர்.
இது இவ்வாறிருக்க மழைகாலத்தில் உடன் வெள்ளப்பெருக்கு எற்படுவதற்கு முறையற்ற வடிகான் அமைப்பின்மையே காரணம் எனவும் பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
ஆகவே எதிர்வரும் காலத்தில் ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கு முறையான வரைபடத்துடனான வடிகான்கள் அமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Post a Comment
Post a Comment