( வி.ரி.சகாதேவராஜா)
பொத்துவில் வட்டிவெளிக் கிராமத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழுகின்ற 27 குடும்பங்களுக்கு ஒவொன்றும் 4000/- பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் வழங்கும் நிகழ்வு நேற்று 4ந் திகதி நடைபெற்றது.
இந்நிகழ்வு றோட்டரிக்கழகத்தின் தலைவர் றொட்டேரியன் என். ரதீசன் தலைமையில் நடைபெற்றதுடன், றொட்டேரியன்கள் செயலாளர் எம். சிவபாதசுந்தரம் , முன்னாள் உபதவிசாளர் பெ. பார்த்தீபன், கே ரவிச்சந்திரன், இ. சுந்தரராஜன் ஆகியோரும் பங்குபற்றினர்.
இதற்கான நிதியினை யாழ் கனகரட்ணம் குடும்பத்தினர் அன்பாலயம் அவுஸ்ரேலியாவினூடாக வழங்கியுள்ளனர்.
மேலும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட 260 குடும்பங்களுக்கு 650,000/- பெறுமதியான உலர் உணவுப்பொதிகள். பாணடிருப்பு, திருக்கோவில், ஆலையடிவேம்பு, திராய்க்கேணி மற்றும் நாவிதன்வெளி பகுதிகளுக்கு கல்முனை றோட்டரிக்கழகத்தினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment