பாறுக் ஷிஹான்
எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் நாபீர் பவுண்டேஷன் அம்பாறை மாவட்டம் முழுவதும் உள்ள பிரதேச சபைகளில் தனித்து போட்டியிவிடுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி துல்சான் தெரிவித்துள்ளார்.
இன்று (26) சம்மாந்துறை ஈ.சி .எம். நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஆட்டோ சங்கங்களுடனான கலந்துரையாடலில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி துல்சான் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது
எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் நாபீர் பவுண்டேஷன் அம்பாறை மாவட்டம் முழுவதும் உள்ள பிரதேச சபைகளில் தனித்து போட்டியிவிடுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் சகல பிரதேச சபைகளிலும் வேட்பாளர்களை இறக்கி வெற்றி பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றோம். இதன் பிறகு வருங்காலங்களில் அரசியலில் நாம் அகலக்கால் பதித்து தடம் பதித்து சாதித்து காட்டுவோம் என்பதை உறுதியாக கூறுகின்றேன் என்றார்.
இக்கலந்துரையாடலில் இறுதியில் அனைத்து சங்கங்களின் உறுப்பினர்களும் எதிர்வரும் பிரதேச சபை தேர்தலிலே சபையை முழுமையாக வென்றெடுப்பதற்கு எங்களால் முடிந்தவரை இறுதி வரை போராடுவோம் என உறுதி அளித்தனர். இக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது ஆட்டோக்கள் அதிகமாக நிறைந்து காணப்பட்டதால் போக்குவரத்துக்கு சற்றுநேரம் தடங்கலாக இருந்து பின்னர் உடனடியாக போக்குவரத்து சரி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் சம்மாந்துறை பிரதேசத்தில் உள்ள சகல ஆட்டோ சங்கங்களின் தலைவர் செயலாளர் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு தத்தமது கருத்துக்களைத் தெரிவித்தனர். அத்தோடு ஆட்டோ சங்கங்களின் ஏக ஆலோசகரான சட்டத்தரணி ஏ.எ. நஸீல் சிறப்பு அதிதியாகவும் கலந்துகொண்டு கருத்துக்களை தெரிவித்தார்.

Post a Comment
Post a Comment