'நான் நரகத்தில் இருந்து வெளியேறிவிட்டேன்' - இஸ்ரேல் சிறையில் இருந்து விடுதலையான பாலத்தீன கைதி
இந்தக் காணொளியில் இருப்பது, பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவித்த காட்சி. செஞ்சிலுவை சங்கத்திடம் 3 பெண் பணயக் கைதிகளை ஹமாஸ் ஒப்படைத்தது. அவர்களை இஸ்ரேலிடம் செஞ்சிலுவை சங்கம் சேர்த்தது.
"நான் நரகத்தில் இருந்து வெளியேறிவிட்டேன். இப்போது சொர்க்கத்தில் இருக்கிறேன், நாங்கள் நரகத்திலிருந்து வெளியேறிவிட்டோம். அவர்கள் எங்களை அத்துமீறி அடித்தார்கள். எங்களை நோக்கி கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். திடீரென சிறைக்குள் நுழைந்து கண்ணீர் புகைக்குண்டுகளை வீசுவார்கள். கெட்ட வார்த்தைகளைச் சொல்லி திட்டுவார்கள், உணவு இல்லை. இனிப்பு, உப்பு இல்லை. ஒன்றுமே இல்லை." என்கிறார் விடுதலையான பாலத்தீன கைதி அப்தெலாஜிஸ்.
Post a Comment
Post a Comment