சர்வதேச மாற்று திறனாளிகள் தினம் இன்றைய தினம் இடம்பெற்றது........
ஜே.கே.யதுர்ஷன்
மட்டக்களப்பு போரதீவுபற்று பிரதேச செயலகமும் கதிரவன் மாற்றுதிறனாளிகள் அமைப்பும் இணைந்து இன்னறய தினம் போரதீவுபற்று கலாச்சார மண்டபத்தில் நடாத்திய சர்வதேச மாற்று திறனாளிகள் தினம்
இவ் நிகழ்வானது போரதீவுபற்று கதிரவன் மாற்றுதிறனாளிகள் அமைப்பின் தலைவர் திரு.மா.சுதாகரன் தலைமையில் இடம்பெற்றது....
இன் நிகழ்வில் பிரதம அதியாக போரதீவுபற்று பிரதேச செயலாளர் திரு.சோ.ரங்கநாதன் கலந்து சிறப்பித்ததுடன் சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட சமுக சேவை உத்தியோத்தர் திரு.AMM.அலியார் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலக சமுகசேவை உத்தியோத்தர் திரு.ச.கோணேஸ்வரன் மற்றும் போரதீவுபற்று மற்றும் வெல்லாவெளி பிரதேச சபை செயலாளர் திரு.சி.பகிரதன் மற்றும் முன்னாள் பொத்துவில் பிரதேச சபை தவிசாளரும் வன்னிகோப் நிறுவனத்தின் இணைப்பாளருமான திரு.பார்தீபன் மற்றும் அவுஸ்ரேலியா வன்னிக்கோப் நிறுவனத்தின் மட்டு அம்பாறை திட்ட இணைப்பாளர் திரு.K. தர்மராஜ் , அகிலன் பவூண்டேசன் லண்டன் அமைப்பின் இணைப்பாளர் V.R.மகேந்திரன் , லண்டன் நன்கொடையாளர் பரநிருபசிங்கம் மற்றும் திரு.த.தங்கதுரை ஆகியோரும் கலந்து கொண்டனர்.....
மேலும் அப்பகுதியில் வாழும் தெரிவுசெய்யப்பட்ட விசேட தேவை உடையவர்களுக்கு வன்னிக்கோப் நிறுவனம் மற்றும் அகிலன்்பவூண்டேஷன் , மார்கண்டு லீங்கராசா லண்டன் ஆகியோரின் நிதி அனுசரனையில் கற்றல் உபகரணங்கள் மற்றும் அன்றாட பாவனைப்பொருட்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டது.....
ஜே.கே.யதுர்ஷன்
Post a Comment
Post a Comment