வி.சுகிர்தகுமார்
அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர் சங்கம் அரசியலுக்காக உருவாக்கப்பட்டதல்ல. உத்தியோகத்தர்களின் நலன்களை பாதுகாக்கவே உருவாக்கப்பட்டது. நாட்டினை யார் ஆட்சி செய்தாலும் அவர்களும் பேசி உத்தியோகத்தர்களுக்கு தேவையானவற்றை பெற்றுக்கொடுப்பது அவசியமாகும என சங்கத்தின் தேசிய தலைவர் கித்சிறி கமகே தெரிவித்தார்.
சங்கத்தின் கடந்த கால செயற்பாடுகள் மற்றும் எதிர்கால செயற்றிட்டங்கள் அசுவெசும வேலைத்திட்டம் தொடர்பில் அம்பாரை மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்க தலைவர்கள் மற்றும் அங்கத்தவர்களை தெளிவூட்டும் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அக்கரைப்பற்று பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் அம்பாரை மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் ஐ.எச்.வஹாப் தலைமையில் நேற்று மாலை (25)இடம்பெற்ற இக்கூட்டத்தில் தேசிய சங்கத்தின் பொருளாளர் அன்வர் மற்றும் பிரதிச் செயலாளர் சமுர்த்தி உத்தியோகத்தர் சங்க உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
கடந்த காலத்தில் செயற்பட்ட சங்கத்தின் செயலாளர் சமுர்த்தி உத்தியோகத்தர்களின் நலன் தொடர்பில் அதிக கவனம் செலுத்தாது அரசியல் நோக்கத்தினை மையமாக கொண்டே செயற்பட்டார். அது சங்கத்தின் செயற்பாடுகளை பாதித்துள்ளதோடு சங்கத்தின் அங்கத்தவர்களின் நலன் தொடர்பிலும் பாதிப்பினை உருவாக்கியது.
அகவே நாட்டினை யார் ஆட்சி செய்தாலும் அவர்களும் பேசி உத்தியோகத்தர்களுக்கு தேவையானவற்றை பெற்றுக்கொடுப்பது அவசியமாகும். அதற்காகவே சங்கம் உருவாக்கப்பட்டது. இதில் தனிநபர் நலன் தொடர்பில் அக்கறை செலுத்த முடியாது.
எனவே சங்கத்தினை புனரமைப்பு செய்து சிறந்த முறையில் செயற்படவேண்டும் எனவும் இங்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதேநேரம் உத்தியோகத்தர்களின் பல்வேறு பிரச்சினைகளும் இங்கு ஆராயப்பட்டது.
சங்கத்தின் சிறந்த செயற்பாடுகளுக்கு வடக்கு கிழக்கில் இருந்து பெரும் ஆதரவு தேசிய சங்கத்திற்கு கிடைக்கும் எனவும் அதில் அம்பாரை மாவட்டமும் இணைந்து கொள்ளும் எனவும் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

Post a Comment
Post a Comment