( வி.ரி. சகாதேவராஜா)
கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (6) திங்கட்கிழமை வாகன விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதில் ஒரே திசையில் பயணித்த ஐந்து வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஒன்றுடன் ஒன்று மோதிய சம்பவத்தால் போக்குவரத்து சில நிமிடங்கள் தடைபட்டது.
ஒரே நேரத்தில் அதே விபத்தில் ஒரு முச்சக்கர வண்டி, ஒரு பேருந்து, மூன்று கார்கள் என்பன விபத்துக்குள்ளாகி உள்ளன.
வாகனங்களுக்கு மாத்திரம் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிராபத்து இல்லை
.
கல்முனை போக்குவரத்து போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Post a Comment
Post a Comment