கிளீன் ஸ்ரீ லங்கா " வேலைத் திட்டத்தின் உறுதி மொழியுடன் காத்தான்குடி பிரதேச செயலக முதல் நாள் நிகழ்வுகள்
- எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ் –
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2025 ஆம் ஆண்டு அலுவலக முதல் நாள் நிகழ்வுகள் காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ.உதய ஸ்ரீதர் தலைமையில் இன்று (01) இடம்பெற்றது.
இதையடுத்து மாநாட்டு மண்டபத்தில் "கிளீன் ஸ்ரீ லங்கா " வேலைத் திட்டத்தின் உறுதி மொழி சந்திய பிரமாணத்தினை அனைத்து உத்தியோகத்தர்களும் எடுத்துக் கொண்டனர்.
கடந்த ஆண்டு சிறப்பாக செயலாற்றிய உத்தியோகத்தர்களுக்கு மெச்சுரை பத்திரங்கள் பிரதேச செயலாளரினால் வழங்கிவைக்கப்பட்டன.
உதவிப் பிரதேச செயலாளர் எம்.எஸ். சில்மியா, கணக்காளர் செல்வி சித்ரா, பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி எஸ்.தனுஜா, நிறுவாக கிராம உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜறூப், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி பத்மா ஜெயராஜ் உட்பட அலுவலக, வெளிக்கள உத்யோகத்தர்களும் இதன் போது கலந்து கொண்டனர்.
2024 ஆம் ஆண்டின் நிதி நடவடிக்கைகளை சமர்ப்பித்தலில் மாவட்டத்தில் முதலிடத்தினை நிதிக் கிளை பெற்றமையையும், காத்தான்குடி மற்றும் புதிய காத்தான்குடி சமுர்த்தி வங்கிகள் அதிக இலாபத்தினை பெற்றமைக்காக பாராட்டு தெரிவிக்கப்பட்டதோடு பிரிவுக்கிளைகளில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கும் கிளைத் தலைவர்களினால் பாராட்டப்பட்டு கேக் வெட்டி புதிய ஆண்டில் மகிழ்ச்சியையும் இதன் போது பகிர்ந்து கொண்டனர்.
Post a Comment
Post a Comment