அடைமழைக்கு மத்தியிலும் அம்பாரை மாவட்டத்தில் தைப்பொங்கல் கொண்டாட்டங்கள்





 வி.சுகிர்தகுமார்         


 அம்பாரை மாவட்டத்திலும் உழவர் திருநாளாம் தைப்பொங்கல் கொண்டாட்டங்கள் இன்று (14) அடைமழைக்கு மத்தியிலும் சிறப்பாக நடைபெற்றன.
அதிகாலையில் எழுந்த மக்கள் நீராடி புத்தாடை அணிந்து இறைவழிபாடு செய்ததன் பின்னர் இயற்கை தெய்வமான சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொங்கலிடும் வேலைகளில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து வீடுகளில் பொங்கல் படைத்து வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் பெரியோர்களின் ஆசியும் பெற்றனர்.
பின்னர் குடும்ப சகிதம் ஆலயங்களுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் உறவினர்கள் நண்பர்களுடன் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டதுடன்; அனைவரும் இணைந்து இனிப்பு பண்டங்களை உண்டு மகிழ்ந்தனர்.
 இதேவேளை அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தில் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் வகையில் விசேட பூஜை வழிபாடுகள் சிவஸ்ரீ ப.கு.கேதீஸ்வரக்குருக்கள் தலைமையில் நடைபெற்றதுடன் பல ஆலயங்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
வழிபாடுகளில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
தைபிறந்தால் வழிபிறக்கும் எனும் பெரும் நம்பிக்கையோடு விவசாயிகளும் மக்களும் தைமகளை வரவேற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.