சுவாட் ஆளுநர்சபைக்கூட்டம் !




 


\

( வி.ரி.சகாதேவராஜா)


அம்பாறை மாவட்ட சமூக நல்வாழ்வு அமைப்பின் (SWOAD) புதுவருட முதலாவது ஆளுநர் சபைக் கூட்டமானது கடந்த சனிக்கிழமை  அமைப்பின் ஸ்தாபகரும், இணைப்பாளருமான ச.செந்துராசா  தலைமையில் அக்கரைப்பற்று தலைமையகத்தில் இடம்பெற்றது. 
 இக்கலந்துரையாடலில் ஆளுநர் சபை உறுப்பினர்களான  கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடம் பேராசிரியர் மருத்துவர் கே.அருளானந்தம், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் கலாநிதி.அனுசியா சேனாதிராஜா , ஓய்வு நிலை உதவி கல்வி பணிப்பாளர் எஸ்.ரவிந்திரன் ,ஓய்வுபெற்ற உதவி கல்விப் பணிப்பாளர் செல்வி கே.கமலாதேவி  மற்றும் நிறுவனத்தின் செயல்பாட்டுடன் இணைந்த ஆறு பிரதேசத்தின் நிர்வாகிகளும் மற்றும் சுவாட் அமைப்பின் முகாமைத்துவசபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.