பொலிஸ்- பொதுமக்கள் நல்லுறவு புத்தாண்டு வரவேற்பு





 (வி.ரி.சகாதேவராஜா)


காரைதீவில் பொலிஸ்- பொதுமக்கள் நல்லுறவு புத்தாண்டு வரவேற்பு நிகழ்வு  இன்று (1) புதன்கிழமை காலை பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது.

காரைதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர். எஸ்.ஜகத் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பொலிஸ் ஆலோசனை குழுவினர் கலந்து சிறப்பித்தனர்.

ஏனைய பொலீசாரும் கலந்து கொண்டனர்.
பல்வேறு வகையான பட்சணங்கள் பால் சோறு பரிமாறப்பட்டன.

முன்னதாக புதுவருட சத்தியப் பிரமாணம் எடுக்கும் நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது