அமெரிக்காவில் 47 ஆவது ஜனாதிபதியாக சற்று முன் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப்
பதவியேற்ற பிறகு கூறியாதாவது:-
அமெரிக்கா சந்தித்த மோசமான கட்டம்- இந்த நொடி முதல் மாறப்போகிறது.
கலிபோர்னியா காட்டுத்தீ பெரும் பணக்காரர்களையும் வீதியில் நிறுத்தி விட்டதாக கூறிய ட்ரம்ப். தேசிய அளவிலான அவசர நிலையை தென் எல்லைகளில் பிரகடனப்படுத்தினார்
“முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் கடுப்பாட்டிலிருந்த அமெரிக்க நிர்வாகம் ஊழல் நிறைந்ததென” கடுமையாக விமர்சித்துப் பேசிய அவர். அமெரிக்காவை சிறந்ததொரு தேசமாக மீண்டும் உருமாற்றவே கடவுள் தன் உயிரைக் காப்பாற்றிக் கொடுத்திருப்பதாகத் தெரிவித்தார்.
அது மட்டுமின்றி பனாமா கால்வாயில் அமெரிக்க கப்பல்களுக்கு அதிக வரி வசூலிக்கப்படுவாகவும் வளர்ந்து வரும் நாடகவே தாம் அமெரிக்காவை கருதுவதால் அதன் எல்லைகளை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்
மேலும் செவ்வாய் கிரகத்தில் அமெரிக்க கொடி கூடிய விரைவில் பறக்குமெனவும் மெக்சிக்கோ வளைகுடா இனி அமெரிக்க வளைகுடா என அழைக்கப்படுமெனவும் அமெரிக்காவில் தற்போது தலைதூக்கியுள்ள துப்பாக்கி கலாசாரத்துக்கு முற்றாக முடிவு கட்டப்படுமெனவும் கூறினார்
Post a Comment
Post a Comment