உடலை அடையாளம் காண உதவுங்கள்!





47 வயது மதிக்கத்தக்க படத்தில் காட்டப்பட்டுள்ள ஆணின் உடல் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளது.


இவர் சுகயீனமுற்ற நிலையில் அக்கரைப்பற்று பிரதான சுற்றுவட்டத்தை  அண்மித்த பிராதன வீதியில் கண்டெடுக்கப்பட்டு கடந்த 1ஆம்‌ திகதி எமது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு அவசர அம்புலன்ஸ் சேவை மூலம் கொண்டு வரப்பட்டிருந்தார்.

பின்னர் சிகிச்சை பலனின்றி இன்று 03 ஆம் திகதி மரணித்த நிலையில் இதுவரை எந்த ஒரு உறவினரும் வருகை தரவில்லை.

(மயக்கமுற்ற நிலையில் அவரது பெயர் தௌபீக், வயது 47, நிந்தவூர் பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் குறிப்பிட்டிருந்தார்.)


இவர் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய பிரிவினை தொடர்பு கொள்ளவும்.


சட்ட வைத்திய அதிகாரி.

ஆதார வைத்தியசாலை.

அக்கரைப்பற்று.

2025.01.03