( வி.ரி.சகாதேவராஜா)
இந்தியா இலங்கை 75 வருட ஆண்டு கால இராஜதந்திர உறவை முன்னிட்டு 'இந்தியாவிலிருந்து அன்புடனும் அக்கறையுடனும்' எனும் தொனிப் பொருளில் கடந்த மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய அரசினால் வழங்கப்பட்ட உலர் உணவு பொதிகள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தை வந்தடைந்துள்ளன.
அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரனின் வேண்டு கோளுக்கு அமைவாக 750உலர் உணவுப் பொதிகள் மாவட்ட செயலத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன..
அதற்கமைய மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற 142 உலருணவுப் பொதிகளை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னத்தின் தலைமையில் இடம்பெற்றது.
அனர்த்த முகாமைத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி பா . பிறேமமாலாவின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் நிருவாக உத்தியோகத்தர் (கிராம சேவகர்) மு. கங்காதரன் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் இணைந்து இப் பொதிகளை வழங்கி வைத்தனர்.
Post a Comment
Post a Comment