கிழக்கு மாகாண பொங்கல் விழா ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில்






 வி.சுகிர்தகுமார்    


கிழக்கு மாகாண பொங்கல் விழா தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் நேற்று (03) ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண கலாசார பண்பட்டாலுவல்கள் திணைக்களமும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் இணைந்து இவ்வருடம் மாகாண பொங்கல் விழாவை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக பொங்கல் விழா தொடர்பில் இறுதி முடிவெடுக்கும் கூட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண கலாசார பண்பட்டாலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.நவனீதன் கலந்து கொண்டதுடன் ஆலையடிவேம்பு உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் மற்றும் அம்பாரை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ஏ.எல்.தௌபீக் உள்ளிட்ட பிரதேச செயலகங்களின் கலாசார உத்தியோகத்தர்கள் ஆலயங்கள் பொது அமைப்புக்கள் விளையாட்டு கழகங்கள் என பல்வேறு அமைப்பின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
மாகாண பொங்கல் விழா பனங்காடு பாசுபதேசுவரர் ஆலயத்தை மையமாக கொண்டு எதிர்வரும் 23ஆம் திகதி நடாத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
அத்தோடு பாரம்பரிய முறையிலான பொங்கல் மற்றும் பல்லேறு கலை கலாசார நிகழ்வுகளுடன் பொங்கல் விழா இடம்பெறும் எனவும் குறிப்பிடப்பட்டதுடன் பொறுப்புக்கள் யாவும் பகிர்ந்தளிக்கப்பட்டன.