மருத்துவ மாதுக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான செயலமர்வு




 


நூருல் ஹுதா உமர்


சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கடமையாற்றும் பொது சுகாதார மருத்துவ மாதுக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான செயலமர்வு அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது

நேச்சர் ஃபார்மிங் பிளாண்டேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் அனுசரனையுடன் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் அந்நிறுவனத்தின் பிரதிநிதிகளான பிராந்திய முகாமையாளர் அரசரெட்ணம் , பிரதேச முகாமையாளர் முகுந்தன்  ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே மதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் குடும்ப நல உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெற்றமை குறிப்பிடத்தக்கது.