உள வள ஆலோசனைகள் தொடர்பான செயலமர்வு!






 நூருல் ஹுதா உமர்


இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு உளவள ஆலோசனைகளை வழங்கி அவர்களை நாட்டுக்கு நல்ல பிரஜைகளாக புடம் போடும் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ள, பணியாளர்கள் மற்றும் அதனோடு தொடர்புடையவர்களுக்கான (Essential Skills and Ethics for Effective Counselling and Mentoring for University Students ) “பல்கலைக்கழக மாணவர்களுக்கு பயனுள்ள ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலுக்கான அத்தியாவசிய திறன்கள் மற்றும் நெறிமுறைகள் செயலமர்வு” என்ற தொனிப்பொருளிலான செயலமர்வு தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் மேம்பாட்டு நிலையத்தின் ஏற்பாட்டில் நிலையத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் எச்.எம்.நிஜாம் தலைமையில் நிலையத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத் கலந்து கொண்டு; நாட்டுக்கு நல்ல பிரஜைகளை உருவாக்கும் உயரிய பணியில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக ஊழியர்களின்  பணிகளை பாராட்டியதுடன் எதிர்காலத்தில் மாணவர்களின் நன்னடத்தையில் மேலும் முன்னேற்றங்கள் இடம்பெற, சம்மந்தப்பட்டவர்கள் கரிசனை செலுத்த வேண்டும் என்றும் குறித்த விடயம் தொடர்பில் கடந்த காலங்களில் தான் கண்ட அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார்.

நிகழ்ச்சி திட்ட முகாமையாளர் சிரேஷ்ட உதவி பதிவாளர் எம்.எச். நபாரின் நெறிப்படுத்தலில்  இடம்பெற்ற  நிகழ்வுக்கு வளவாளர்களாக கலந்து கொண்ட முன்னாள் மாணவர் நலன்புரி சேவைகள் நிலையத்தின் பணிப்பாளர் (SSSW) சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ.எம். சமீம், (Common issues in student counselling & Mentoring) என்ற தலைப்பிலும் பொறியியல் பீடத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எஸ். எம். ஜுனைடீன், (Essential skills and strategies for effective counselling and mentoring for university students) என்ற தலைப்பிலும் சட்டம் மற்றும் ஆவணங்கள் பிரிவின் சிரேஷ்ட உதவி பதிவாளர் சட்டத்தரணி ஏ.ஆர்.எம். சுல்பி, (Legal perspective on student discipline and student counselling) என்ற தலைப்பிலும் கருத்துரைகளை வழங்கினர்.