பிரதேச ஒருங்கிணைப்புக் கூட்டம் பொத்துவில் பிரதேசத்தில்.




 


பிரதேச ஒருங்கினைப்புக் கூட்டம் பொத்துவில் பிரதேசத்தில்.....


அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேசத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற 2025ஆண்டுக்கான புதிய அரசின்  முதலாவது பிரதேச அபிவிருத்தி  ஒருங்கினைப்பு குழுக்கூட்டம் இடம்பெற்றது....


ஜே.கே.யதுர்ஷன்...


குறித்த கூட்டமானது பொத்துவில் பிரதேச செயலாளர்  M.M.ஆசீக் அவர்களின் ஏற்பாட்டில் பிரதேச அபிவிருத்தி  ஒருங்கினைப்பு  குழு தலைவர் A.ஆதம்வாபா(தேசிய மக்கள் சக்தி ) அவர்களின் தலைமையில் இடம்பெற்றது    ....


இவ் கூட்டத்தில் பிரதேச அபிவிருத்தி பற்றியும் ஆராயப்பட்டதுடன் அபிவிருத்தி குறித்து உரிய திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடலும் தீர்மானங்களும் எடுக்கப்பட்டது....


மேலும் கடந்த வருட கூட்டத்தில் எடுக்கப்பட்ட திட்டங்கள் தீர்மானங்கள் இடம்பெற்று உள்ளதா என்பது பற்றி பிரதேச ஒருகிணைப்பு குழு தலைவர் ஆராய்ந்தார்..   


மேலும்்இவ் நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் M.S.உதுமாலெப்பை மற்றும் பொத்துவில் பிரதேச செயலக உதவிச்செயலாளர் M.ராமக்குட்டி பிரதேச செயலக கணக்காளர் மற்றும் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் பிரதேச சபை செயலாளர் மற்றும் முன்னாள் பிரதேச சபை தவிசாளர்  உறுப்பினர்கள் வனவிலங்கு அதிகாரிகள் கரையோர பிராந்திய திணைக்கள அதிகாரிகள் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகள்  உத்தியோத்தர் முப்படையினர் பிதேச பொது அமைப்புகளின் தலைவர்கள் கிராம சேவையாளர்கள் மின்சார சபை அதிகாரிகள் நீர்பாசன திணைக்கள அதிகாரிகள் கமநல சேவை அதிகாரிகள் விவசாய திணைக்கள அதிகாரிகள் என பலரும் இவ் நிகழ்வில் கலந்து கொண்டனர்.....


பொத்துவில் பிரதேசத்தில் அபிவிருத்தி ,தேவைகளுக்கு குறைபாடுகள் ஆகிய வற்றிக்கான  உடன் தீர்வும் குறித்த கூட்டத்தில் உரிய அதிகாரிகள் ஊடக  வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது....