வி.சுகிர்தகுமார்
அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தின் வருட ஆரம்ப நிகழ்வும் கருத்துப்பரிமாற்றமும் கலை நிகழ்வும் நேற்றிரவு (05) நடைபெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தின் தலைவர் ஓய்வு நிலை அதிபர் பெ.தணிகாசலம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுகளில் அம்பாரை மாவட்ட தமிரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் மன்றத்தின் ஆயுட்கால தலைவர் வே.சந்திரசேகரம் உள்ளிட்ட மன்ற உறுப்பினர் சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மன்றத்தின் சுவாமி அறையில் இடம்பெற்ற பூஜைகளை தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமானது. இதன் போது உரையாற்றிய தலைவர் கடந்த வருடத்தில் மன்றத்தில் பல்வேறு செயற்பாடுகள் தொடர்பிலும் இதற்காக ஒத்துழைப்பு வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் உள்ளிட்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி கூறினார்.
இதனிடையே பலரது கருத்துப்பரிமாற்றங்களும் இடம்பெற்றதுடன் மாணவர்கள் உள்ளிட்ட பலரது கலை நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டது.
இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்
இந்துமாமன்றம் ஆற்றிவரும் சேவைகள் தொடர்பில் தான் மகிழ்வடைவதாக கூறினார்.
மேலும் ஆட்சியில் அமர்ந்துள்ள அரசாங்கம் எப்பொழுது பலத்தை இழக்கும் என்பது தெரியாமல் உள்ளது. இந்நிலையில் அரசாங்கத்தை நம்பி நாம் எதுவும் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். வெறும் கஜானாவை வைத்து பொறுப்பேற்ற அரசாங்கம் வெளிநாடுகளை நம்பியே உள்ளது.
இந்நிலையில் அனைத்து மக்களும் சமத்துவத்துடன் வாழும் சூழலை உருவாக்குவோம் என கூறிவிட்டு இந்து இஸ்லாம் கிறிஸ்தவ அமைச்சுக்களை இல்லாதொழித்துவிட்டு பௌத்த கலாசார அமைச்சை தனியே உருவாக்கியுள்ளனர். இவ்வாறு இருக்கையில் மதநல்லிணக்கம் எவ்வாறு பேணப்படும் என கேள்வி எழுப்பினார்.
ஆகவே அரசியலாக இருந்தாலும் எதுவாக இருந்தாலும் தமிழ் மக்கள் எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை மீளவும் இதன் மூலம் வலியுறுத்துவதாக குறிப்பிட்டார்.

Post a Comment
Post a Comment