"க்ளீன் ஸ்ரீ லங்கா என்பது வளமான நாட்டையும் அழகான வாழ்க்கையையும் கட்டியெழுப்புவதற்கு அத்தியவசியமான, கூட்டு அர்ப்பணிப்புடன் செயலாற்றும், அத்துடன் பொறுப்புக்கூறும் தொழிற்பாடாகும். இன, மத அல்லது அரசியல் பேதமின்றி இத்தேசிய நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்து
செயற்படுவதற்கு உறுதிமொழி அளிக்கின்றோம்.
சகல நடவடிக்கைகளிலும், அனைத்து பிரசைகள் உயர் சமூக அந்தஸ்தை அடைவதற்கு உறுதுணையாக அமைகின்ற. ஒற்றுமை, பொறுப்புக்கூறல், சிக்கனம், வெளிப்படைத்தன்மை மற்றும் சமத்துவம் ஆகிய விடயங்களை முன்னுதாரணமாக கடைப்பிடிப்பதற்கும், அத்தர நியமங்களை பாதுகாத்த வண்ணம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.அபிமானம் கொண்ட இலங்கைப் பிரசைகள் என்ற வகையில் அழகானதொரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கும், வளமான வாழ்க்கையை அடைவதற்கும். நேர்மையுடனும் ஒரே நோக்கத்துடனும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவோம் என்பதாக சத்தியப் பிரமாணம் செய்கின்றோம்./ உறுதிமொழிகின்றோம் என குறிப்பிட்டார்.
மேலும் நிகழ்வில் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் கே.எல் யாஸீன் பாவா நன்றியுரை மேற்கொண்டதுடன் சிற்றூண்டி வைபவத்துடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.
மேலும் இந் நிகழ்வுக்கு பிரதேச செயலக கணக்காளர் கே.எம்.எஸ். அமீர் அலி நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சி.எம் .பளீல் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர் , கல்முனை பிரதேச செயலக சமூர்த்தி தலைமை பீட சிரேஷ்ட முகாமையாளர் எ. ஆர். எம். சாலிஹ், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஏ.ஜாபீர் , நிர்வாக கிராம சேவை உத்தியோகத்தர் , மேலதிக மாவட்ட பதிவாளர் எம்.டி.எம் கலீல், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஜனூபா நெளபர் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
Post a Comment
Post a Comment