88,000 மெற்றிக் தொன் அரிசி துறைமுகத்திலிருந்து வெளியேற்றம்





 அனுமதியின்றி அரிசியை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளித்து இன்று (4) வரை 88,000 மெற்றிக் தொன் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி துறைமுகத்தில் இருந்து அகற்றப்பட்டு அனுப்பப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர், மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சிவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.


இறக்குமதி செய்யப்பட்ட 88,000 மெற்றிக் தொன் அரிசியில் 34,000 மெற்றிக் தொன் கச்சா அரிசியும் 54,000 மெற்றிக் தொன் புழுங்கல் அரிசியும் உள்ளடங்குவதாகவும், சுங்கத்திற்கு அனுப்பப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட அரிசி விரைவில் விடுவிக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


நாடு எதிர்நோக்கும் அரிசி நெருக்கடிக்கு தீர்வாக, இறக்குமதி அனுமதிப்பத்திரம் இன்றி அரிசியை இறக்குமதி செய்வதற்கான சந்தர்ப்பத்தை தனியார் துறையினருக்கு தற்போதைய அரசாங்கம் கடந்த 4 ஆம் திகதி திறந்து வைத்துள்ளது.