மேற்குறித்த கட்டுமானம் மற்றும் சிலை வைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உரிய சட்ட நடைமுறைகளுக்கு அமைவாக கல்முனை பிரதேச செயலகத்திலிருந்து காணி தொடர்பான அனுமதிப்பத்திரத்தினையும், கல்முனை மாநகர சபையினூடாக நிர்மாணத்தினை மேற்கொள்வதற்குரிய அனுமதியினையும் பெற்ற பின்னரே குறித்த குறித்த காணிக்குள் நிர்மாண வேலைகளை மேற்கொள்ளுமாறு ஏற்கனவே மேற்குறித்த கடிதங்கள் மூலம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது. ஆகவே இவ்வறிவுறுத்தல் கிடைக்கப்பெற்று ஏழு (7) நாட்களுக்குள் தங்களால் அனுமதியின்றி செய்யப்பட்ட நிர்மாண வேலைகளை அகற்றி ஆதனத்தினை முன்பிருந்த நிலைக்குக் கொண்டுவருமாறு வேண்டப்படுகின்றீர். தவறும் பட்சத்தில் தங்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்பதனை அறியத்தருகின்றேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலை திரை நீக்கம்- நீதிமன்ற தடையுத்தரவு




மேற்குறித்த கட்டுமானம் மற்றும் சிலை வைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உரிய சட்ட நடைமுறைகளுக்கு அமைவாக கல்முனை பிரதேச செயலகத்திலிருந்து காணி தொடர்பான அனுமதிப்பத்திரத்தினையும், கல்முனை மாநகர சபையினூடாக நிர்மாணத்தினை மேற்கொள்வதற்குரிய அனுமதியினையும் பெற்ற பின்னரே குறித்த குறித்த காணிக்குள் நிர்மாண வேலைகளை மேற்கொள்ளுமாறு ஏற்கனவே மேற்குறித்த கடிதங்கள் மூலம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.


ஆகவே இவ்வறிவுறுத்தல் கிடைக்கப்பெற்று ஏழு (7) நாட்களுக்குள் தங்களால் அனுமதியின்றி செய்யப்பட்ட நிர்மாண வேலைகளை அகற்றி ஆதனத்தினை முன்பிருந்த நிலைக்குக் கொண்டுவருமாறு வேண்டப்படுகின்றீர். தவறும் பட்சத்தில் தங்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்பதனை அறியத்தருகின்றேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  சிலை திரை நீக்கம்- நீதிமன்ற தடையுத்தரவு


கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் முறைப்பாட்டிற்கமைய கல்முனை நீதிவான் நீதிமன்ற பதில்  நீதிவான்  அஹமட்லெப்பை நாதீர் கல்முனை கல்லடி நில குளத்தில் கல்முனை மாநகர சபையின் அனுமதியின்றி சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை திறப்புவிழா நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலிருந்து கல்முனை தமிழ் காலாச்சார பேரவை தலைவர் செயலாளர் உப தலைவர் ஆகியோருக்கு 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கை முறை சட்டக்கோவை பிரிவு 106(1) இன் கீழான தடை உத்தரவு பிறப்பித்திருந்தார்.


மேலும் குறித்த சட்டவிரோத கட்டுமான நடவடிக்கையால் பல்லின இனங்கள் வாழும் இப்பிரதேசத்தில் இனமுறுகல் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதாகவும் குறித்த குறித்த திறப்பு விழாவினை உடனடியாக தடை செய்து கட்டளை வழங்குமாறு விண்ணப்பம் செய்துள்ளபடியால் மேற்குறித்த விடயங்களைக் கருத்தில் கொண்டு குறித்த திறப்புவிழா நடவடிக்கைகளை இன்றிலிருந்து 14 நாட்களுக்கு தடைசெய்கின்ற விதமாக இத்தால் உமக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்கப்படுகின்றது என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும்  குறித்த சிலை திறப்பு விழாவுக்கு பிரதம அதிதியாக அம்பாறை அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம கலந்துகொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கல்முனை தமிழர் கலாசார அபிவிருத்தி பேரவை அமைந்துள்ள காணி குத்தகை முறையான விதத்தில் இல்லையென்றும் அங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள நிர்மாணிப்புக்கள் அனுமதியில்லாத முறையற்ற விதத்தில் அமைந்துள்ளமை தொடர்பில்  விமர்சனங்கள் எழுந்து வண்ணம் இருக்கும் நிலையில் இப்போது இந்த விடயம் பேசுபொருளாக மாறியுள்ளது.