கிழக்கு மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை(20) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
நிலவும் பலத்த மழையுடனான வானிலை காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.
நாளை இடம்பெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் சனிக்கிழமை நடத்த திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, நிலவும் பலத்த மழையுடன் கூடிய வானிலையால் ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கற்றல் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் ஒலுவில் பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களை வௌியேறுமாறு ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகம் அறிக்கை ஊடாக அறிவித்துள்ளது.
Post a Comment
Post a Comment