Rep/Naalir
" திண்ணை " தோழர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட அக்கரைப்பற்று ஒளிப்படக் கண்காட்சியை பார்வையிடவென இன்று மாலை அங்கு சென்றிருந்தேன்.
மிகவும் நுணுக்கமானதும், கருத்துச் செறிவுள்ளதும், மக்களுக்கும், தமது பெற்றோர்களை வயோதிபர் மடங்களில் கவனிப்பாரற்று தங்கவைக்கும் பிள்ளைகளுக்கும் விழிப்பூட்டக் கூடிய வகையிலான ஒளிப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
மிகவும் பிரயோசனமான கண்காட்சியாக அமைந்திருந்தது.
மேலும் இக்கண்காட்சியானது இன்னும் விரிவுபடுத்தப்படுவதுடன், இது போன்ற நிகழ்வுகளுக்கு பாடசாலை மாணவர்களும் விசேடமாக கலந்து கொள்ளச் செய்யப்படுவதும் அவசியமாகும்.
இதனை ஏற்பாடு செய்வதில் முழுமூச்சாக தொழிற்பட்ட தோழரும், ஒளிப்படக்கலைஞருமான அப்துல் ஹமீட், டாக்டரும், ஒளிப்படக்கலைஞருமான Dr .ஆக்கில் அஹமட், மற்றும் ஏனைய ஒளிப்படக்கலைஞர்களுக்கும் எனதினிய வாழ்த்துக்களும், நன்றிகளும்....
Post a Comment
Post a Comment