தம்பிலுவில் சரஸ்வதி வித்தியாலய மாணவன்  கிருத்திக் பிரணவன்  174 புள்ளிகளை பெற்று வலயத்தில் முதலிடம்




.



சுகிர்தகுமார் 


 5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை முடிவுகளின்படி திருக்கோவில் கல்வி வலயத்தில் 155 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளதாக வலய கல்வி பணிப்பாளர் ஆர்.உதயகுமார் தெரிவித்தார்.
ஆலையடிவேம்பு கோட்டத்தில் 80 மாணவர்களும் திருக்கோவில் கோட்டத்தில் 66 மாணவர்களும் பொத்துவில் கோட்டத்தில் 9 மாணவர்களும் சித்தியடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வலய மட்டத்தில் தம்பிலுவில் சரஸ்வதி வித்தியாலய மாணவன்  கிருத்திக் பிரணவன்  174 புள்ளிகளை பெற்று வலய மட்டத்தில் முதலிடத்தை பிடித்துக்கொண்டதுடன் 173 புள்ளியினை பெற்று பனங்காடு பாசுபதேசுவரர் வித்தியாலயம் மாணவி; இரண்டாம் நிலையினையும் 171 புள்ளிகளை பெற்று தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயம் மற்றும் அக்கரைப்பற்று அன்னை சாரதா கலவன் பாடசாலை மாணவர்கள் இருவர் மூன்றாம் நிலையினை பெற்றுக்கொண்டனர்.
இதேநேரம் ஆலையடிவேம்பு கோட்டத்தில் அன்னை சாரதா வித்தியாலயத்தில் 18 மாணவர்களும் திருவள்ளுவர் வித்தியாலயத்தில் 17 மாணவர்களும் அக்கரைப்பற்று விவேகானந்தா வித்தியாலயத்தில் 16 மாணவர்களும் சித்தியடைந்துள்ளதுடன்  திருக்கோவில் கல்வி வலயத்தில் குமர வித்தியாலயத்தில் 15 மாணவர்களும் தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயத்தில் 12 மாணவர்களும் சித்தியடைந்து வலயத்தில் அதி கூடிய மாணவர்கள் சித்தியடைந்துள்ள பாடசாலைகள் எனும் பெருமையினை பெற்றுள்ளது.
இந்நிலையில் திருக்கோவில் கல்வி வலயத்தில் கடந்த வருடம் 126 மாணவர்கள் சித்திடைந்த நிலையில் இம்முறை 155 மாணவர்கள் சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் அக்கரைப்பற்று விவேகானந்தா வித்தியாலயம் ஆலையடிவேம்பு கோட்டத்தில் தொடர்ந்தும் அதிக மாணவர்களை சித்தியடைச் செய்யும் பாடசாலையாக இருப்பது பாராட்டுக்குரியது என தெரிவித்த பிரதிக்கல்விப்பணிப்பாளரும் ஆலையடிவேம்பு கோட்டக்கல்விப்பணிப்பாளருமான கி.கமலமோகனதாசன் கடந்த வருடம் சற்று வீழ்ச்சி அடைந்த அன்னை சாரதா கலவன் பாடசாலை இம்முறை வளர்ச்சி அடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது என கூறினார்.



 தொடர்ந்தும் அதிக மாணவர்களை சித்தியடைச் செய்யும் பாடசாலையாக இருப்பது பாராட்டுக்குரியது என தெரிவித்த பிரதிக்கல்விப்பணிப்பாளரும் ஆலையடிவேம்பு கோட்டக்கல்விப்பணிப்பாளருமான கி.கமலமோகனதாசன் கடந்த வருடம் சற்று வீழ்ச்சி அடைந்த அன்னை சாரதா கலவன் பாடசாலை இம்முறை வளர்ச்சி அடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது என கூறினார்.

 
புலமைப் பரிசில் பரீட்சையில் 2023 ம் வருடம் திருக்கோயில் வலயம் 88.53 சித்தி வீதத்தினைப் பெற்று தேசிய ரீதியில் தமிழ்மொழி வலயங்களில் முதலாம் இடத்தினையும் கிழக்கு மாகாணத்தின் சிங்கள மற்றும் தமிழ்மொழி வலயங்களிடையே 3 வது இடத்தினையும் பெற்றிருந்து சாதனை படைத்திருந்தது.
2024ம் வருடத்தில் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற சித்தி வீதம் 88.66 ஆக உள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இது 0.14 வீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
ஆயினும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் சில பாடசாலைகளில் சித்தியடைந்த மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.