அமெரிக்க தாக்குதல் மூளை சம்சுதீன் யார்?




 


அமெரிக்காவின் நியூ ஆர்லீன்ஸ் நகரத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக கூடியிருந்த மக்கள் கூட்டத்திற்கு நடுவே ஒருவர் டிரக்கை விட்டு மோதியதில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 35 பேர் காயமடைந்துள்ளனர் என காவல்துறை தெரிவித்துள்ளது. டிரக் ஓட்டுநர் வேண்டுமென்றே டிரக்கை விட்டு மோதியதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

நியூ ஆர்லீன்ஸ் நகரின் பிரபலமான போர்பன் ஸ்ட்ரீட்டில் புத்தாண்டு பரபரப்புகளுக்கு இடையே, மக்கள் மத்தியில் டிரக் மோதியதில் இந்த கோர சம்பவம் நடந்துள்ளது.

மேலும், தாக்குதலுக்குப் பிறகு நடத்தப்பட்ட ஆய்வில் டிரக்கின் பின்புறத்தில் ஐஎஸ் ஆயுதக் குழுவின் கொடி கண்டுபிடிக்கப்பட்டதாக எஃப்.பி.ஐ தெரிவித்துள்ளது. மேலும் இந்த தாக்குதல் "பயங்கரவாத செயலாக" இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருவதாகக் கூறியுள்ளனர்.