ஆண்டின் முதல் 15 நாட்களில் 65 வீதி விபத்துக்கள் – 68 பேர் பலி!




 


வருடம் ஆரம்பித்து முதல் 15 நாட்களில் 65 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன், இவ்விபத்துக்களால் 68 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வீதி விபத்துக்களால் 99 பேர் உயிரிழந்துள்ளனர்.


அதேபோல், 2023 ஆம் ஆண்டில், முதல் 15 நாட்களில் 105 பேர் வீதி விபத்துகளில் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.