உணவு விஷமாதால் 13 பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டு டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் இன்று (10) அனுமதிக்கப்பட்டதாக வைத்தியரொருவர் தெரிவித்துள்ளார்.
அட்டன் வலயக் கல்வி அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள டிக்கோயா பாடசாலையில் 4 மற்றும் 5 ஆம் வகுப்புகளில் படிக்கும் 9-10 வயதுக்குட்பட்ட 13 குழந்தைகள் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தலைச்சுற்றல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், மாணவர்கள் பாடசாலையில் மதிய உணவை சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பிய பிறகு இந்த அறிகுறிகள் தோன்றியதாகவும் வைத்தியர் கூறினார்.
மேலும், இவ்வாறு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் நிலை மோசமாக இல்லை எனவும் வைத்தியர் தெரிவித்துள்ளார்.
Post a Comment
Post a Comment