நூருல் ஹுதா உமர்
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் 24 வது ஊழியர் ஒன்றுகூடலும் 2024/2025 ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தெரிவும் பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீட கேட்போர் கூடத்தில் ஊழியர் சங்கத்தின் தலைவர் எம்.ரீ. எம். தாஜுதீன் தலைமையில் 2024.12.18 ஆம் திகதி இடம்பெற்றது.
இரு கட்டங்களாக நடைபெற்ற இந்நிகழ்வில் முதல் அமர்வுக்கு பிரதம அதிதியாக பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத் கலந்து கொண்டு உரையாற்றிய துடன் கௌரவ அதிதியாக பல்கலைக்கழக நூலகர் எம்.எம். றிபாவுடீனும் பங்குகொண்டு உரையாற்றினார்.
நிகழ்வுக்கு தலைமை வகித்து உரையாற்றிய சங்கத்தின் தலைவர் எம்.ரீ. எம். தாஜுதீன், கடந்த காலங்களில் சங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைத்தது போன்று எதிர்வரும் முன்னெடுப்புகளுக்கு ஊழியர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் ஒற்றுமையாக செயலாற்றுவதனூடாகவே எங்கள் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்று கூறினார்.
பிரதம அதிதியாக கலந்து கொண்ட பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத் தனது உரையில், அணிகள் வித்தியாசமின்றியும் மனிதாபிமான ரீதியாகவும் ஊழியர்கள் விடயத்தில் தான் எப்போதும் நடந்து கொள்வதாகவும் நிறுவனத்தின் தலைவர் என்ற அடிப்படையில் எந்த ஊழியரதும் உரிமைகளுக்கு எதிராக நடந்து கொண்டதுமில்லை என்றும் தெரிவித்தார்.
கௌரவ அதிதியாக கலந்து கொண்டிருந்த நூலகர் எம்.எம். றிபாவுடீன், தான் பல்கலைக்கழகத்தின் ஆரம்பம் முதல் சகல ஊழியர்களுடனும் இணைந்து பணியாற்றுவதாகவும் ஊழியர்களின் நலன் விடயத்தில் மிகுந்த பொறுப்புடன் நடந்து கொள்வதாகவும் தெரிவித்ததுடன் ஊழியர்கள் ஒற்றுமையாக செயற்படுவதனூடாகவே உச்ச உரிமைகளை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் தாங்கள் பணியாற்றும் நிறுவனத்தின் கீர்த்திக்கு பங்கம் ஏற்படாத முறையில் கடந்த காலங்களில் ஊழியர்களின் போக்குகள் இருந்ததாகவும் தற்போது சில ஊழியர்கள் சமூக ஊடகங்கள் ஊடாக குறைகளை கூற முற்படுவதாகவும் அவ்வாறான வழிமுறைகளை தவிர்த்து கூட்டாக செயற்படுமாறும் கேட்டுக்கொண்டார்.
நிகழ்வில் சங்கத்தின் செயற்பாடுகளுக்கு பெரிதும் உதவிய ஊடகவியலாளர்களான மீராசாஹிப் சஹாப்தீன் மற்றும் முகம்மட் யூசுப் அமீர் ஆகியோர் கெளரவிக்கப்பட்டதுடன் சங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஊக்கமளிக்கும் விதத்தில் கவிதைகள் மற்றும் பாடல்கள் யார்த்த பீர் முகம்மது ஹிதாயத்துல்லாஹ் குழுவினரும் கௌரவிக்கப்பட்டதுடன் பல்கலைக்கழக சேவைக்காலத்தில் 25 வருடங்களை பூர்த்தி செய்த ஊழியர்களும் கெளரவிக்கப்பட்டது விசேட அம்சமாகும்.
இரண்டாம் அமர்வில் சங்கத்தின் தற்போதைய நிலவரம் கடந்த கால செயற்பாடுகள் நிதி நிலைமைகள் எதிர்காலத்தில் எடுக்கப்படவேண்டிய முன்னெடுப்புக்கள் தொடர்பில் விவாதிக்கப்பட்டன.
நிகழ்வின்போது 2024/2025 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தெரிவாகினர். அதன் அடிப்படையில்
தலைவர்: காதர் முகைதீன் அஹமட் முனாஸ்
உப தலைவர் : ஆதம் லெப்பை முஹம்மட் ஹஸ்மிர்
செயலாளர்: முஹம்மது மக்பூல் முஹம்மது காமில்
உப செயலாளர்: முகம்மட் தம்பி ஹாஸிர் முகம்மட்
உப செயலாளர் பிரயோக விஞ்ஞான பீடம் : பீர் முகம்மது ஹிதாயத்துல்லாஹ்
பொருளாளர்: அபூபக்கர் முகம்மது றினோஸ்
நலன்புரி இணைச் செயலாளர் ஆண்: சம்சுதீன் றிபாய்தீன்
நலன்புரி இணைச் செயலாளர் பெண்: அப்துல் கபூர் பாயிஷா கியாஸ்
உள்ளக கணக்கு பரிசோதகர்: மீராலெப்பை றினாஸ்
நிர்வாக உத்தியோகத்தர்களாக
பதிவாளர் 1: அப்துல் ரசூல் அஸ்லம் ஸிஹான்
பதிவாளர் 2: முகம்மது காசிம் அப்துல் கபூர்
நிதியாளர் பகுதி: அஹமது லெப்பை சதக்கத்துல்லாஹ்
முகாமைத்துவ வர்த்தக பீடம்: ஜமால்தீன் ஆப்தீன்
கலை கலாச்சார பீடம்: யாசீன்பாவா முபாறக்
இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடம்: முகம்மது அனிபா முகம்மது அஷ்ரப்
பிரயோக விஞ்ஞான பீடம்: ஆதம் லெப்பை முகம்மது பைரோஜி
தொழில்நுட்பவியல் பீடம்: இப்ராஹீம் ஜௌபர்
பொறியல் பீடம்: சீனி முஹம்மது முஹம்மது ஜிப்ரி
சாரதிகள் பிரிவு: முஹம்மது இஸ்மாயில் நூருல் அமீன்
பிரதான நூலக பிரிவு: ஆசிம் முகம்மது ஆஷாத்
பாதுகாப்பு பிரிவு: ஆதம்லெப்பை முகம்மது றிஸ்வான்
ஆய்வுகூட பிரிவு: முகம்மட் யூசுப் அமீர்
களஞ்சிய பிரிவு: முஹம்மது ஹசன் ஹிஜாஸ் அகமட்
பராமரிப்பு பிரிவு: அப்துல் ஜப்பார் முஹம்மது ஹாரிஸ்
நில அழகு படுத்தல் பிரிவு: அப்துல் நஸீர் நௌஷாட்
நலன்புரி உடற்கல்வி பிரிவு: முன்மொழியப்படவில்லை.
வெளிவாரி கற்கைகள், CGU, SDC, மற்றும் ERSU பகுதிகள்: அப்துல் றசீட் முகம்மட் சியாம்.
Post a Comment
Post a Comment