( வி.ரி. சகாதேவராஜா)
நாட்டில் நிலவுகின்ற நல்லிணக்கம் மற்றும் சமாதானம் சமூகங்களுக்குள்ளே இருக்கின்ற உறவுகளை கட்டியெழுப்புவது தொடர்பான மூவின பிரதிநிதிகளுக்கான கலந்துரையாடல் ஒன்று நேற்று அம்பாறையில் நடைபெற்றது.
அவற்றை எதிர்வரும் காலங்களில் அதனை எவ்வாறு சிறப்பாக முன்னெடுத்து செல்லலாம் என்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
சமாதானமும் சமூகப் பணியும் அமைப்பின் குறித்த ஒன்று கூடலானது அம்பாரை ஆரியவான் ஹோட்டலிலே நேற்று முன்தினம் (10) காலை 9.30 மணியளவில் நிறுவனத்தின் பணிப்பாளர் த.தயாபரன் தலைமையில் இடம்பெற்றது.
இதில் தமிழ் முஸ்லிம் சிங்களம் ஆகிய நல்லிணக்க குழுக்களில் இருந்து 50 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் .
மேற்படி கலந்துரையாடலை நிறுவகத்தின் உதவிப் பணிப்பாளர் த. ராஜேந்திரன் முன்னெடுத்திருந்தார்.
மேலும் நிகழ்வில் puja நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் கேஸாயினி. எட்மன், சமாதான சமூகப்பணி நிறுவன திட்ட உத்தியோகத்தர் கே. ரி. ரோகினி, மேலும் உத்தி யோகத்தர்கள்,
பிரதேச மட்ட நல்லிணக்க குழுக்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட இக் குழுவானத்து தொடர்ச்சியாக 06 வருடங்களாக இயங்கி வருகின்றது.
அது மட்டும் இல்லாமல் இவர்கள் பிரதேசங்களிலே காணப்படுகின்ற இனமுரண்பாடுகள், சமூகங்களுக்கிடையிலே உள்ள தப்பான எண்ணங்கள், பிழையான கருத்துக்கள்,சமூகங்களுக்கிடையி ல் ஒற்றுமையை கொண்டுவருவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
அதேபோன்று மாவட்ட மட்டத்தில் இருக்கின்ற சமாதானத்திற்கு எதிரான காரணிகள் அல்லது நல்லிணக்கத்கிற்கு தடையான காரணிகளை அடையாளம் கண்டு
தடைகளை நீக்குவது மேலும் மாவட்ட மட்ட பல்லின சமூகங்களுக்கிடையில் சேர்ந்து வாழ்வது, எவ்வாறு சேர்ந்து வேலை செய்வது ஒரு நிரந்தரமான சமாதானத்தினை கட்டியெப்ப முடியும் என்பதே இக் குளுக்களின் குறிக்கோளாகும்.
அத்துடன் இந்த அம்பாறை மாவட்ட சமாதானமும் சமூகப் பணியும் அமைப்பு
குழுவானது மாவட்ட மட்டத்தில் இருந்து எவ்வாறு தேசிய மட்டத்திற்கு கொண்டு சென்று ஒற்றுமையை கட்டி யெழுப்பதற்கான செயற்பாட்டினை கொண்டு செல்வது நல்லிணக்கம் மனித உரிமைகளுக்காக பணியாற்றுகின்ற குழுக்களின் தொடர்பினை உருவாக்கி தேசிய மட்டத்தில் எல்லோரும் இணைந்து அநீதி களுக்கு குரல் கொடுக்கின்ற அமைப்பாகவும் சமாதானம் சமூகப் பணிஅமைப்பினர் மேற்கொண்டுள்ளனர்.
அது மட்டும் இல்லாது எந்த சமூகத்திற்கு அநீதி ஏற்படும் இடத்தில் அதனை சுட்டிக் காட்டியும் அவர்களுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கும் அதனை தட்டி கேட்பதற்கும் பலமான கட்டமைப்பினை உருவாக்கும் அமைப்பாகவும், மத கலாச்சார நல்லிணக்கத்திற்கு பாடுபடுகின்ற அமைப்பாக இந்த சமாதானமும் சமூகப் பணிஅமைப்பினர் இருக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment
Post a Comment