அம்பாரை மாவட்டத்திலும் இராணுவத்தினரின் மனிதாபிமான பணிகள்




 


வி.சுகிர்தகுமார்       

 அம்பாரை மாவட்டத்திலும் இராணுவத்தினரின் மனிதாபிமான பணிகள் இடம்பெற்று வருகின்றன.
இராணுவத்தினர் வெள்ள அனர்த்தம் இடம்பெற்ற இடங்களுக்கு சென்று மக்களுக்கான உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைவாக அக்கரைப்பற்று இராணுவ முகாமின் 241ஆம் படைப்பரிவின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் டானிக பத்திரரெட்ணவின் முயற்;சியின் பயனாக நேற்றைய தினம் (03)ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவின் அலிக்கம்பை மற்றும் ஆலையடிவேம்பு போன்ற பிரிவுகளுக்கான உலர் உணவுப்பொதிகளை வழங்கி வைத்தனர்.
 மேஜர் ஜானக சுபசிங்கவின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற உலர் உணவுகள் வழங்கும் நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் கலந்து கொண்டு பொதிகளை பொறுப்பேற்றுக்கொண்டார்
இதன் பின்னராக இராணுவத்தினருக்கும் பெற்றுக்கொடுத்தவர்களுக்கும் நன்றி கூறினார்.