( எம்.என்.எம்.அப்ராஸ்)
சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தம் இடம்பெற்று இடம்பெற்று இன்றுடன் 20வருடங்கள் பூர்த்தியாகின்றன. சுனாமி அனர்த்ததினால் உயிரிழந்தவர்களின் நினைவாக அம்பாரை மாவட்டம் கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாஹுர் ஆண்டகை தர்ஹாவில் கத்தமுல் குர்ஆன் வைபவமும் விஷேட துஆ பிரார்த்தனையும் இன்று(26)இடம்பெற்றது . கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்கா ஷரீஃப் நம்பிக்கையார் சபை ஏற்பாடு செய்த கத்தமுல் குர்ஆன்,விஷேட துஆ பிராத்தனையும் கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாஹுர் ஆண்டகை தர்ஹாவில் இடம்பெற்றது. கல்முனை மஸ்ஜிதுல் புர்க்கானிய்யா பேஸ் இமாம் மௌலவி நௌபர் அமீன் (வாஹிதி)அவர்களினால் விஷேட துஆப் பிரார்த்தனையும்,கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் நாஹுர் ஆண்டகை தர்ஹா ஷரீஃப் பிரதி தலைவர் மௌலவி அல்ஹாஜ் ஏ.ஆர்.சபா முஹம்மது (நஜாஹி காதிரி) அவர்களினால் சுனாமி நினைவு உரையும் இடம்பெற்றது. இதன் போது உலமாக்கள்,முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் நாஹுர் ஆண்டகை தர்ஹா ஷரீஃப் தலைவர் எம். எல்.ஏ.அஸீஸ், ஜாமிஆ மன்பயில் ஹிதாயா அரபுக் கலாபீட மாணவர்கள் பள்ளிவாசல் நிர்வாக்தினர் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர் கடந்த 2004 ஆண்டு ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலை அனர்தத்தினால் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிரதேசம் அதிகமான உயிரிழப்புக்களையும், சேதங்களை சந்தித்த பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment