Rep/AzarAadam
கிழக்கு மாகாண ஆசிரியர் சேவைக்குள் 2024 ஆம் ஆண்டுக்கான ஆட்சேர்ப்பின் முதற்கட்டமாக 52 ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தலைமையில் இன்று (26) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்க, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் கே.குகநாதன்,மாகாண ஆளுநரின் செயலாளர் ஜே.எஸ்.அருள்ராஜ், மாகாண அரச சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் ஜே.லியாகத் அலி, மாகாண கல்விப்பணிப்பாளர் திருமதி எஸ்.ஆர்.ஹசந்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாண அரச ஆசிரியர் சேவைக்கான முதற்கட்ட ஆட்சேர்ப்பில் நியமனங்களை ஏற்காத மற்றும் சேவைக்கு சமூகமளிக்காதவர்களுக்குப் பதிலாக 52 பேர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர் என்று கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தெரிவித்தார்.
.
Post a Comment