நூருல் ஹுதா உமர்
நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் மற்றும் அம்பாறை மாவட்ட பெண்கள் அமைப்பு அனுசரனையுடன் பிரதேச மட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக்கூட்டம் மற்றும் பால்நிலை சார் வன்முறைக்கு எதிரான செயலணிக் கூட்டம் (DCDC & GVB ) காரைதீவு பிரதேச செயலாளர் ஜீ.அருணன் தலைமையில் இடம்பெற்றது.
காரைதீவு பிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் எஸ்.நித்யாவின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் துறைசார் உத்தியோகத்தர்களினால் சிறுவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் எதிர்கொள்கின்ற சவால்கள் பற்றி ஆராயப்பட்டது.
இதன்போது அனர்த்த முன்னெச்சரிக்கை தொடர்பாகவும் அதற்கு முன் ஆயத்தம் தொடர்பாகவும் ஆராயப்பட்டதுடன் மாணவர்கள் இடைவிலகல் மற்றும் மாணவர்கள் தற்கொலை, அதற்கான காரணங்கள் பற்றி ஆராயப்பட்டது. அத்தோடு பாடசாலைகளை அண்டிய பகுதிகளில் போடப்படுகின்ற கழிவுகளும் அதை தடுக்கும் வழிமுறைகள் மற்றும் பல விடயங்கள் ஆராயப்பட்டது.
இந்த கூட்டத்தில் சுகாதார வைத்திய அதிகாரி பிரதிநிதிகள், பொலிஸ் திணைக்கள பிரதிநிதிகள், வலயக் கல்வி அலுவலக பிரதிநிதிகள், பிரதேச செயலக அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment
Post a Comment