( வி.ரி. சகாதேவராஜா)
பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனையின் ஏற்பாட்டில் கல்வியில் சாதனைபடைத்த மாணவர்கள் மற்றும் சாரளம் சஞ்சிகை வெளியீட்டு விழா பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் தலைமையில் செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் நேற்று முன்தினம் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் வ.கனகசிங்கம் கலந்து கொண்டார்.
சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண காணி ஆணையாளர் என்.விமல்ராஜ், டாக்டர் வாசுதேவன், சட்டத்தரணி கே.கிருபாகரன் உட்பட பிரதிக்கல்விப்பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரியர்கள், கல்விசார உத்தியோகத்தர்கள், மாணவர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
இங்கு பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனைக்குட்பட்ட பாடசாலைகளில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரிட்சை, க.பொ.த. சாதாரண பரிட்சை, க.பொ.த உயர்தரப்பரிட்சை மற்றும் இணைப்பாட விதான செயற்பாடுகளில் மாகாண, தேசிய ரீதியில் சாதனைபடைத்த மாணவர்கள் பதக்கம், நினைவுச் சின்னம், சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
பட்டிருப்பு கல்வி வலயத்தின் 2024 ஆம் ஆண்டுக்குரிய சாரளம் சஞ்சிகையின் முதற் பிரதியினை வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கத்திற்கு வழங்கிவைத்தார். மிகச் சிறப்பாக நடைபெற்ற இச் சாதனையாளர் பாராட்டு விழாவில் 350 இற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பாராட்டி கெளரவிக்கப்பட்டதுடன். வலயக்கல்வி பணிமனையின் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக்கல்வி பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் எனப்பலரும் கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment