சமுர்த்தி அருணலு கடன் வழங்கல் பயிற்சிப்பட்டறை




 


வி.சுகிர்தகுமார்  


 சமுர்த்தி அருணலு கடன் வழங்கல் தொடர்பான பயிற்சிப்பட்டறை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் நேற்றும் இன்றும் (17. 18) நடைபெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் என்.கிருபாகரன் தலைமையில் இடம்பெற்ற பயிற்சி செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் மற்றும் உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் ஆகியோர் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர்
சமுர்த்தி பயனாளிகள் அநியாய வட்டி நிறுவனங்களிடம் அகப்பட்டு தமது வாழ்வினை சீரழிப்பதை நிறுத்தி சமுர்த்தி திட்டத்தினூ10டாக அரசாங்கம் முன்னெடுக்கும் வாழ்வாதாரத்தை உயர்த்தும் கடன்கள் இதுபோன்ற சிறிய அவசர கடன்களை பெற்று முன்னேற்றம் அடைய வேண்டும் என அவர் இதன்போது கேட்டுக்கொண்டார்.
இதன் பின்னராக வளவாளர்களாக கலந்து கொண்ட சமுர்த்தி தலைமையக முகாமையாளர் என்.கிருபாகரன் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் சிவப்பிரியா சுதாகரன் ஆகியோர் கடன் தொடர்பான விளக்கத்தனை வழங்கினார்கள்.
அத்தோடு சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் ஊடாக வழங்கப்படும் இக்கடனை சமுர்த்தி வங்கியில் இருந்து பெறுதல் மற்றும் அதனை மீளச்செலுத்தல் தொடர்பான பதிவேடுகள் பேணும் முறை தொடர்பிலும் விளக்கமளித்தனர்.
நிகழ்வில் வங்கி முகாமையாளர் எஸ்.சுரேஸ்காந்த் மற்றும் கவிதா அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரிவு சமுர்த்தி உத்தியோகத்தர்கள் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் தலைவர் பொருhளாளர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.