(வி.ரி.சகாதேவராஜா)
அனைத்துலகத் தமிழர் பேரவை திருக்கோவில் பிரதேசத்தில் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு 150 நுளம்பு வலைகளை விநியோகம் செய்துள்ளது.
இந் நிகழ்வு நேற்று (24) செவ்வாய்க்கிழமை திருக்கோவில் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
அனைத்துலகத் தமிழர் பேரவையின் நிதிப் பங்களிப்புடன் உலகத் தமிழ் மாணவர் ஒன்றியம் மற்றும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் இளவாலை, விருட்சம் உதவும் உள்ளங்கள் அமைப்பினரால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment