வங்கதேசம்: மீண்டும் தீவிர அரசியலில் இறங்கும் ஷேக் ஹசீனா




 


நான்கு மாதங்களுக்கு முன், மிகப்பெரிய மாணவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து, முன்னாள் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியில் இருந்து விலகி, இந்தியாவிற்கு வந்தார். நீண்ட அமைதிக்குப் பிறகு, அவர் தற்போது அரசியல்ரீதியான கருத்துகளைத் தெரிவிக்கத் தொடங்கியுள்ளார்.


கடந்த வாரம், நியூயார்க்கில் அவாமி லீக் கட்சியின் நிகழ்ச்சியில் ஆன்லைன் மூலம் அவர் பங்கேற்றார். தற்போது, டிசம்பர் 8ஆம் தேதி லண்டனில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில், மொபைல் வாயிலாக அவர் பங்கேற்கவுள்ளார்.


முன்னதாக ஷேக் ஹசீனா இரண்டு ஐரோப்பிய நாடுகளில் உரையாற்றியுள்ளதை, அவாமி லீக் கட்சியின் அமைப்புச் செயலாளர் காலித் மஹ்மூத் செளத்ரி பிபிசியிடம் உறுதி செய்தார்.


அறிக்கை விடுவதன் மூலம் ஷேக் ஹசீனா "அரசியலில் தொடர" முயல்வதாக, வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) கருதுகிறது.


விளம்பரம்


ஷேக் ஹசீனாவின் சமீபத்திய உரைகளுக்குப் பிறகு, மீண்டும் அவர் தீவிர அரசியலில் ஈடுபடவுள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.


இந்தியா - வங்கதேசம்: அதிகரிக்கும் பதற்றம் இரு நாட்டு உறவை எந்த அளவுக்கு பாதிக்கும்?

வங்கதேசம்: இந்தியாவுக்கு எதிராக நள்ளிரவில் ஒன்றுகூடிப் போராடிய மாணவர்கள் - என்ன காரணம்?

சின்மோய் கிருஷ்ண தாஸ்: இந்து துறவி கைதால் இந்தியா - வங்கதேச உறவில் பதற்றம் ஏன்?

வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே நடந்த முதல் நேரடி பரிமாற்றம் - இந்தியாவுக்கு என்ன பிரச்னை?


சில வல்லுநர்கள் ஷேக் ஹசீனாவின் திடீர் அரசியல் உரைகளை, நான்கு மாத அமைதிக்குப் பிறகான அவரது அரசியல் செயல்பாடுகளுடன் இணைத்துப் பார்க்கின்றனர்.


எனினும், அவரின் கட்சியின் அமைப்பு செயலாளர் காலித் மஹ்மூத் செளத்ரி "அவாமி லீக் கட்சி எப்போதும் அரசியலில் இருப்பதாக" தெரிவித்தார்.


நியூயார்க்கில் சமிபத்தில் பேசிய ஷேக் ஹசீனா, வங்கதேசத்தில் சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுவதாகத் தெரிவித்தார்.


"அவரையும் அவரது சகோதரி ஷேக் ரெஹானாவையும் கொல்லத் திட்டமிடப்பட்டதாக" ஷேக் ஹசீனா கூறினார்.


ஷேக் ஹசீனா 

படக்குறிப்பு,வீடியோ கால் மூலம் ஷேக் ஹசீனா நியூயார்க்கில் நடந்த அவாமி லீக் கட்சிக் கூட்டத்தில் உரையாற்றினார்.

காலித் மஹ்மூத் செளத்ரி கூறுகையில், "ஷேக் ஹசீனா என்னவெல்லாம் சொல்கிறாரோ, அதை அவர் இந்த தேசத்தின் நலனுக்காகச் சொல்கிறார். தவறானவர்கள் கைகளில் இந்த நாடு சென்றுள்ளது. இந்த நாடு, நாட்டின் மக்கள் மற்றும் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பது அவாமி லீக் கட்சியின் தார்மீகப் பொறுப்பு. ஏனெனில் அவாமி லீக் கட்சி இந்த நாட்டின் உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகித்துள்ளது," என்றார்.


அதே நேரம் வியாழக்கிழமை, வங்கதேச அரசு நிறுவனமான சர்வதேச குற்றங்களுக்கான நீதிமன்றம் (ஐசிடி வங்கதேசம்) நியூயார்க்கில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நிகழ்த்திய உரையைத் தடை செய்தது.


சுவாரஸ்யமாக, முந்தைய அவாமி லீக் கட்சியின் அரசு, வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவர் தாரீக் ரஹ்மான் வெளியிட்ட அனைத்து உரைகளையும் தடை செய்திருந்தது. ஆனாலும், உயர்நீதிமன்றம் அந்தத் தடையை இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீக்கியது.


தாரீக் ரஹ்மான் வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. கலீதா ஜியா, ஷேக் ஹசீனா ஆகிய இருவரும் வங்கதேச அரசியலில் நீண்ட காலமாக அரசியல் எதிரிகளாக இருந்து வந்தனர்.


மற்றொருபுறம், ஷேக் ஹசீனாவின் உரையைத் தடை செய்ததை முகமது செளத்ரி விமர்சித்தார். மேலும் அவர் இதை "பேச்சு சுதந்திர மீறல்" எனக் கூறினார்.


அவாமி லீக் கட்சி இதுபோன்ற கட்டுப்பாடுகளைக் கட்சி நிறுவப்பட்ட போதிருந்து சந்தித்து வருவதாக அவர் தெரிவித்தார்.


ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம் - வங்கதேச நெருக்கடியைத் தீர்க்க இந்தியாவால் என்ன செய்ய முடியும்?

6 ஆகஸ்ட் 2024

ஷேக் ஹசீனா அரசு கவிழ்ந்த பிறகு பாகிஸ்தானை நெருங்குகிறதா வங்கதேசம்?

21 செப்டெம்பர் 2024

ஷேக் ஹசீனா உரையின் எதிர்வினை

ஆகஸ்ட் 5ஆம் தேதி, வங்கதேசத்தின் மக்கள் பிரதமரின் இல்லம் மற்றும் பாராளுமன்றத்தை கைப்பற்றினர்பட மூலாதாரம்,Getty Images

அவாமி லீக் "அனைத்து கடினமான சூழ்நிலைகளையும் உறுதியாக எதிர்கொள்ளும்" என்று கூறியுள்ளது.


ஆனால், எழுத்தாளரும் ஆய்வாளருமான முஹாதின் அகமது, "ஷேக் ஹசீனா அல்லது அவரது கட்சியின் தலைவர்கள் என்ன சொன்னாலும் அதற்குச் சான்று இல்லை" என்று கூறினார்.


"ஷேக் ஹசீனா பேசுவது வங்கதேச அரசியலுக்கான வெறுப்புப் பேச்சு. அவர் மத நல்லிணக்கத்திற்கு எதிராக ஆத்திரமூட்டும் அறிக்கைகளை வெளியிடுகிறார்" என்று வங்கதேசத்தில் அவாமி லீக் கட்சியின் போட்டியாளரான வங்கதேச தேசியவாத கட்சியின் நிலைக்குழு உறுப்பினர் சலாவுதீன் அகமது பிபிசியிடம் தெரிவித்தார்.


சலாவுதீன் அகமது இதன்மூலம் ஷேக் ஹசீனா அரசியலில் தொடர முயல்வதாகக் கருதுகிறார்.


"அவரது அறிக்கைகள் வங்கதேச மக்களின் நலன்களுக்கு எதிராகவும், வங்கதேசத்தின் சுதந்திரம் மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது. இதை அரசியல் என்று அழைக்க முடியாது" என்றார் அவர்.


ஷேக் ஹசீனா - வங்கதேசம் - இந்தியாபட மூலாதாரம்,Getty Images

ஹசீனாவின் "வெறுக்கத்தக்கப் பேச்சு" வெளியிடப்படுவதைத் தடை செய்த நீதிமன்ற உத்தரவை "சரியானது" மற்றும் "ஆதரவளிக்கப்பட வேண்டியது" என்று அகமது விவரித்தார்.


"கடந்த ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில், அவர்கள் நாடு முழுவதும் மக்களைப் படுகொலை செய்தனர். இதுபோன்ற கொலைகளைச் செய்துவிட்டு நாட்டைவிட்டு வெளியேறி அரசியல் பணியை மேற்கொள்ள அவர்களுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை" என்று மக்கள் ஒற்றுமை இயக்கத்தின் தலைமை அமைப்பாளர் ஜுனைட் சாகி கூறினார்.


"ஆனால், அந்தச் சம்பவத்திற்குப் பிறகு ஷேக் ஹசீனாவும் அவரது கட்சியும் என்ன செய்தாலும், வங்கதேச மக்களை வார்த்தைகளால் தவறாக வழிநடத்த முடியாது. ஏனெனில் அவர்களின் ரகசியங்கள் அனைத்தும் கசிந்துவிட்டன," என்று அவர் கூறினார்.


ஜுனைட் சாகி "இந்து சமூகம் மீதான தாக்குதலை ஷேக் ஹசீனா தூண்டுவதாக" கருதுகிறார்.


ஷேக் ஹசீனா அரசு கவிழ்ந்த பிறகு சீனாவை நெருங்கும் வங்கதேசம் - இந்தியா என்ன செய்யப் போகிறது?

2 நவம்பர் 2024

பற்றி எரியும் வங்கதேசம்: தப்பி வந்த இந்திய மாணவர்கள் என்ன சொல்கிறார்கள்?

21 ஜூலை 2024

ஷேக் ஹசீனா மற்றும் இந்தியா-வங்கதேசம் உறவு

ஷேக் ஹசீனா மற்றும் மோதிபட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஷேக் ஹசீனா நான்கு மாதங்களாக இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.

வங்கதேச இடைக்கால அரசின் வெளியுறவு ஆலோசகரான தாஹீத் உசைன், ஷேக் ஹசீனாவின் இந்திய வருகைக்குப் பின்னர் வெவ்வேறு நேரங்களில் உரைகள் நிகழ்த்துவதைப் பொருத்தமானதாகக் கருதவில்லை.


பதவியேற்ற சில நாட்களிலேயே, ஷேக் ஹசீனா இந்தியாவில் அமர்ந்து அரசியல் அறிக்கைகளை வெளியிடக் கூடாது என்று இந்திய தூதரிடம் தாஹீத் உசைன் கூறினார்.


தொடக்கத்தில், ஷேக் ஹசீனா இந்தியாவில் அமர்ந்து நேரடி அரசியல் உரையைக் கொடுத்ததாகத் தெரியவில்லை. ஆனால், இடையிடையே அவர் இரண்டு உரைகளை நிகழ்த்தியுள்ளார். அதன் பிறகு நியூயார்க்கில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.


ஷேக் ஹசீனாவின் அதிகாரப்பூர்வமான உரைகள் மற்றும் இனி பேசவுள்ள உரைகள் பற்றி வங்கதேச அரசின் நிலைப்பாட்டை அறிய தாஹீத் உசைன் மற்றும் பல அரசு அதிகாரிகளை பிபிசி தொடர்பு கொள்ள முயன்றது.


முஹாதின் அகமது, வங்கதேச அரசியல் எழுத்தாளர் மற்றும் ஆய்வாளர். இவர் வங்கதேச அரசியல் கட்சிகளைப் பற்றி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். அவர், "சில நபர்கள் வெளிநாட்டில் இருந்து, வங்கதேசம் பற்றி அரசியல் பிரசாரங்களைப் பாதுகாப்பான இடத்திலிருந்து மேற்கொண்டு வருகின்றனர். இவை அனைத்தும் இந்தியாவின் திட்டங்கள்" என்று கருதுகிறார்.


:இந்தியாவிற்குக் கிடைத்துக் கொண்டிருந்த பொருளாதார, ராணுவ பலன்கள் இடம் மாறிக் கொண்டிருப்பதால், இந்தியா நடத்தும் நாடகத்தின் ஒரு பகுதியாக ஷேக் ஹசீனா வேலை செய்வதாக" அவர் விமர்சித்தார்.


வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதலா? கிரிக்கெட் வீரர் வீடு எரிக்கப்பட்டதாக புகைப்படம் வைரல்

7 ஆகஸ்ட் 2024

ஷேக் ஹசீனாவுக்கு அரசியல் புகலிடம் தரப்படுமா? இந்தியா முன்னுள்ள 3 வழிகள்

2 செப்டெம்பர் 2024

ஒருவேளை, ஷேக் ஹசீனாவின் உரை இந்தியாவுடைய நாடகத்தின் ஒரு பகுதியாக இருந்தால், அதை வங்கதேச அரசு எவ்வாறு தடுக்கும்?


முஹாதின் அகமது கூறும்போது, "அவர்கள் இதற்குப் பதில் அளிக்கவில்லையெனில், இது களத்தில் இருக்கும் அரசியல் கட்சிகளுக்குச் சவாலானதாக இருக்கும். அவர்கள் தகுதியானவர்களாக இருந்தால், இதற்கு மாற்றாகப் பிரசாரம் மேற்கொள்வர்.


அவர்களுக்கு அந்தத் தகுதி இல்லையெனில், வேறு எந்த வகையான அரசியலை அவர்கள் மேற்கொள்வார்கள்?


நான் கூறுவது, அவாமி லீக் கட்சியை எதிர்ப்பவர்களுக்கு வெளிநாடுகளில் கிளை உள்ளது. இந்தப் பிரசாரத்திற்கு இந்தக் கட்சிகள் என்ன சொல்லப் போகின்றன என்று நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்," என்றார்.


இந்தியா, வங்கதேசத்துடன் "பகை உணர்வுடன்" செயல்படுவதாகக் கூறிய அவர், இதனால் எதிர்காலத்தில் பிரச்னையைச் சந்திக்க நேரிடும் எனவும் குறிப்பிட்டார்.