தமிழக வீரர் குகேஷ் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார். சீனாவை சேர்ந்த டிங் லிரேனை வீழ்த்தி, 18 வயதான குகேஷ் இந்தச் சாதனையைச் செய்துள்ளார்.
செஸ் போர்டில் தனது காய்களை நகர்த்துவதற்கு முன்பாக, சில நொடிகள் கண்களை மூடிக்கொண்டு யோசிப்பது குகேஷின் வழக்கம்.
இந்த முறை அவர் கண்களை மூடி யோசித்தது உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லும் காட்சியாக இருந்திருக்கலாம், அந்தக் காட்சி தற்போது நனவாகியுள்ளது. உலகின் இளைய செஸ் சாம்பியனாக சென்னையைச் சேர்ந்த 18 வயது டி குகேஷ் வெற்றி பெற்றுள்ளார்.
Post a Comment
Post a Comment