(வி.ரி. சகாதேவராஜா)
சாய்ந்தமருது வைத்தியசாலையின் பின்புறத்திலுள்ள தாமரைக் குளத்தினை சுத்தமாக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்குளத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பாக தேசிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா உள்ளிட்ட குழுவினர் நேற்று (19) வியாழக்கிழமை பார்வையிட்டனர் .
குளத்தின் ஆழமான பகுதிகளில் தேங்கி நிற்கும் குப்பைகளை சுத்தம் செய்து தொடர்ச்சியான மேற்பார்வையில் இருக்குமாறும் பணிப்புரை விடுத்திருந்தார்.
அவரின் பணிப்புரைக்கு அமைய இன்று வெள்ளிக்கிழமை(20) தாமரை குளத்தினை துப்புரவு செய்யும் பணிகள் கல்முனை மாநகர சபை ஊழியர்களினால் திண்மக் கழிவுகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
நேற்றய இப்பார்வையிடலில் கல்முனை மாநகர சபை பொறியியளாலர் ஏ.எம்.ஜெளசி உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினரின் உத்தியோகத்தர்கள்,வைத்தியர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
Post a Comment
Post a Comment