கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு




 



பாறுக் ஷிஹான்



கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு அதிகளவான உயரமான கிறிஸ்மஸ் மரங்கள் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.


குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பல வர்ணங்களால் ஆன இவ்வாறான மரங்கள் காணப்பட்டதுடன் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அலங்கார மின் குமிழ்கள் நத்தார் மரங்கள் என்பன மக்களால் அதிகம் கொள்வனவு செய்யப்படுவதை காணக்கூடியதாக உள்ளது.

இன்று  25ம் திகதி கொண்டாடப்படவுள்ள நத்தார்  கிறிஸ்மஸ் அலங்காரப் பொருட்கள் என்பன இப்பகுதியில்  மும்முரமாக விற்பனையாகின்றன.கடந்த ஆண்டினை விட இந்த ஆண்டு  வியாபாரம் அதிகளவாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கிறிஸ்தவ மக்களால் கொண்டாப்படும் பண்டிகையாக இருந்தாலும்  அனைத்து மக்களும் தமது வீட்டினை அழகுபடுத்துவதற்காக குறித்த அலங்காரப் பொருட்களை கொள்வனவு செய்கின்றனர்.

இது தவிர நத்தார் நள்ளிரவு திருப்பலி கல்முனை திரு இருதயநாதர்  தேவாலயத்தில் ஒப்புக் கொடுக்கப்பட்டது.
பங்குத்தந்தை பேதுறு ஜீவராஜ்  தலைமையில் கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.அத்துடன் தேவாலயத்தை சுற்றி இராணுவம்   பொலிசார்  பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.மேலும் இவ்வாராதனையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக   வழிபாடுகளில்   பங்கு கொண்டிருந்தனர்.




கொண்டாடப்படுகின்றது.


கிறிஸ்துவின் பிறப்பும் வாழ்வும் அவரது போதனைகளும் மனித வாழ்வின் மீட்பிற்கும், மனமாற்றத்திற்கும், எழுச்சிக்கும் வித்திட்டுள்ளன. மனிதன் மனிதனாக வாழ்வதற்கு கிறிஸ்துவின் போதனைகள் வழி வகுத்துள்ளன. இந்த வகையில் ஒவ்வொரு தனி மனிதனுடைய வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்துவதாக அவை அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.