புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு





 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் கசிந்த மூன்று வினாக்களுக்கு இலவச மதிப்பெண்கள் வழங்க தீர்மானித்ததன் மூலம் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


இது தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு வழங்கிய மூன்று பரிந்துரைகளில் ஒன்றை ஏற்கும்படி பரீட்சைகள் ஆணையாளருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.